போலீஸ் எஸ்.ஐ தேர்வு: எக்ஸாமுக்கு ரெடியாகுறவங்களுக்கு சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 1,352 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வரும் நிலையில், எஸ் ஐ தேர்வுக்காக படித்து வரும் தேர்வர்களுக்கு பொன்னான வாய்ப்பு ஒன்றை புதுக்கோட்டை வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மேற்கோண்டுள்ளது.
காவல்துறையில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக இருக்கும். தமிழக காவல்துறை பணிக்காக ஆட்சேர்ப்பு பணியை சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் மேற்கொள்கிறது. இந்த நிலையில், தமிழக காவல்துறையில் எஸ் ஐ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு அண்மையில் வெளியானது.

கல்வித் தகுதி, வயது வரம்பு
1,352 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 53 இடங்கள் எஸ்.சி.(ஆதித்திராவிடர்கள்), எஸ்.டி (பழங்குடியினர்) வகுப்பினருக்கான பின்னடைவு பணியிடங்கள் ஆகும். ஆண், பெண் மற்றும் 3-ம் பாலித்தனத்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 30-க்குள் இருக்க வேண்டும்., பி.சி., பி.சி-முஸ்லிம், எம்.பி.சி. வகுப்பினருக்கு 32, எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினர் மற்றும் 3-ம் பாலினத்தவருக்கு 35, ஆதரவற்ற விதவைகளுக்கு 37 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட உடற்தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 10 சதவீதம் (ஆண்களுக்கு 7 சதவீதம், பெண்களுக்கு 3 சதவீதம்) ஒதுக்கீடு வழங்கப்படும்.
எத்தனை பணியிடங்கள்?
போலீஸ்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு 20 சதவீதமும், போலீசாரின் வாரிசுகளுக்கு 10 சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கப்படும். உரிய கல்வித் தகுதியும், உடற்தகுதியும் உடைய பட்டதாரிகள் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் www.tnusrb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க மே 3 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
எழுத்துத் தேர்வும் அதைத்தொடர்ந்து, உடற்தகுதி தேர்வும், இறுதியாக நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். இதில் பெறும் மதிப்பெண்களை வைத்து தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். மாவட்ட அளவில் ஆண்கள்-654, பெண்கள்-279 என 933 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களும், ஆயுதப்படை பிரிவில் ஆண்கள்-255, பெண்கள்-111 என 366 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகிறார்கள். எழுத்து தேர்வுக்காக வீட்டில் இருந்து வேலை பார்த்துக்கொண்டும், பயிற்சி மையத்திற்கு சென்றும் என இளைஞர்க்ள் பலரும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில், எஸ் ஐ தேர்வுக்காக படித்து வரும் தேர்வர்களுக்கு பொன்னான வாய்ப்பு ஒன்றை புதுக்கோட்டை வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மேற்கோண்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் எஸ்.ஐ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக இத்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 23 ஆம் தேதி காலை 10.30 முதல் துவங்கப்படவுள்ளது.
மாதிரி தேர்வுகள்
இதில், அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டும், ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. வாராந்திர மாதிரித் தேர்வுகளும் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in/ போட்டித்தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பாடக்குறிப்புகள் மற்றும் இணையவழி மாதிரிதேர்வுகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் விண்ணப்ப நகல் ஆகியவற்றுடன் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகைபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்" இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications