இன்டன்ஷிப் + ஐடி வேலை + அசரடிக்கும் சம்பளம்.. வீட்டில் இருந்தே பணியாற்ற அழைக்கும் பிரபல நிறுவனம்
சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம். இன்டன்ஷிப் முறையில் பணியாற்றுவோருக்கு மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், இன்டன்ஷிப்பிற்கு பிறகு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான சம்பளத்திலும் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
மகாராஷ்டிராவை தலைமையிடமாக கொண்டு FutureSmart AI எனும் சாப்ட்வேர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

குறிப்பாக என்எல்பி (Natural Language Processing) சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி Chatbot Development, Speech To Text, Text To Speech உள்பட வெவ்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து தான் தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இன்டன்ஷிப் முறையில் பணிக்கு சேர்ந்து நிரந்தரமாக வேலையை பெற முடியும். இதுகுறித்த முக்கிய விபரங்கள் வருமாறு: தற்போதைய அறிவிப்பின்படி FutureSmart AI நிறுவனத்தில் ப்ரண்ட்எண்ட் டெவலப்பர் (Frontend Developer - React/Next.js) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் எதுவும் இருக்கக்கூடாது. மேலும் Frontend-யை பொறுத்தவரை React.js, Next.js,, Tailwind CSS, Mantine Ui, DaisyUI, AntD, React Charts, Reat Markdown உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். Backend & Infrastructure-யை பொறுத்தவரை Nginx, PM2, AWS தெரிந்திருக்க வேண்டும்.
இன்டன்ஷிப்பில் பணியாற்றுவோருக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இன்டன்ஷிப் முடிவடையும் பட்சத்தில் இந்த நிறுவனத்தில் பணியை பெறுவோருக்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்படும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் Remote முறையில் வேலை செய்யலாம். அதாவது அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும். தினமும் 8 மணி நேர பணி என்பது இருக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் FutureSmart AI நிறுவனத்தில் இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி தொடர்பான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications