வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. எச்சிஎல்லில் நவ.,22ல் இண்டர்வியூ.. சென்னை உள்பட 3 இடங்களில் வேலை
சென்னை: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நவம்பர் 22ம் தேதி ஹேக்கத்தான் முறையில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் இதற்கான இண்டர்வியூ நடைபெற உள்ளது. இது ‛ஹைபிரிட்' வகை பணியாகும். இதனால் வாரத்தில் 2 நாட்கள் வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்வது நல்லது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் நம் நாட்டின் முக்கிய நகரங்களிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.

இந்த எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது ஜிசிபி டேட்டா இன்ஜினியர் பிரிவில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனை நிரப்ப அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு BigQuery, Cloud Composer or Airflow, Dataflow or Dataproc or data fusion, Python or Pyspark (ஏதாவது ஒன்று கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்), DBT, SQL, GKE உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Spanner, Harness, GenAI, Looker உள்ளிட்டவை தெரிந்திருந்தாலும் நல்லதும்.
அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சமாக 13 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இது ஹைபிரிட் மாடல் பணியாகும். இதனால் வாரத்தில் 2 நாட்கள் வரை அலுவலகம் செல்லாமல் வீட்டிலேயே இருந்து கூட பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். இந்த ஹேக்கத்தான் இண்டர்வியூ நவம்பர் 22ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் ஹேக்கத்தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இணையதளத்தின் வழியாக இந்த பணிக்கு வரும் 19 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப படிவத்தில் பணியாற்றும் இடம், இண்டர்வியூ இடம் உள்ளிட்டவற்றை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தில் அனைத்து விவரங்களையும் பூர்ததி செய்து ‛சப்மிட்' செய்ய வேண்டும். அதன்பிறகு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஹேக்கத்தான் இண்டர்வியூவுக்காக தேதி, நேரம் குறித்த விவரங்கள் இ-மெயில் அல்லது தொலைபேசி வழியாக தெரிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications