HCl-யில் சூப்பர் வேலை.. ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை சம்பளம்! சென்னையில் ஜுன் 8 ல்இன்டர்வியூ
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல்-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இன்டர்வியூ நாளை மறுநாள் சென்னை, நொய்டாவில் நடைபெற உள்ளது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.4.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று எச்சிஎல் டெக்னாலஜிஸ். சுருக்கமாக எச்சிஎல் நிறுவனம் என அழைக்கப்படுகிறது. இந்த எச்சிஎல் நிறுவனத்தின் கிளைகள் சென்னை, நொய்டா உள்பட பல முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் இந்தியாவில் இயங்கும் எச்சிஎல் நிறுவனத்துக்கு தேவையான ஆட்சேர்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி எச்சிஎல்த நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியர்/சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். 2021 முதல் 2023ம் ஆண்டுக்குள் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் .NET, JAVA Full Stack, Java Guidewire, Automation Testing Selenium SAP உள்ளிட்டவற்றில் திறமை பெற்றிருக்க வேண்டும். அதோடு குறிப்பிட்ட பிரிவில் 6 முதல் 24 மாதங்கள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். .
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் பணி நியமனம் பெற வாய்ப்புள்ளது. இதற்கான இன்டர்வியூ என்பது நொய்டா மற்றும் சென்னையில் நாளை (ஜுன் 8 ம் தேதி)காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. Automation Testing Selenium பணிக்கான நேர்க்காணல் நொய்டாவில் மட்டுமே நடைபெற உள்ளது.
நொய்டாவில் என்றால் ஏ/8/9 செக்டார் - 70, எச்சிஎல் டெக்னாலஜிஸ் நொய்டா என்ற இடத்திலும், சென்னை என்றால் எல்காட்- எஸ்இஇசட், டவர் 3, எச்சிஎல் டெக்னாலஜிஸ், கிரவுண்ட் ஃப்ளோர் (நியூ ரவுண்ட் கஃபே), சோழிங்கநல்லூர் 600119 என்ற முகவரியில் நேர்க்காணல் நடைபெற உள்ளது.
நேர்க்காணல் செல்வோர் போட்டோவுடன் கூடிய ரெஸ்யூம், 10, 12, இளங்கலை, முதுகலை படிப்புக்கான ஒரிஜினல் மற்றும் நகல் மார்க்சிட்டை கையில் வைத்திருக்க வேண்டும். ஆதார்கள் கார்டு, பார்ன் கார்டு உள்ளிட்டவற்றின் ஹார்ட்காபியை கையில் எடுத்து செல்ல வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். நாளை நேர்க்காணல் நடைபெற உள்ளதால் உடனே விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்பணப்ம் செய்ய Click Here
-
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications