2021-ல் தேர்ச்சி பெற்றவர்கள்.. கொரோனா பேட்ச்' ஐ வேலைக்கு எடுத்துக் கொள்ளவில்லையா ஹெச்டிஎப்சி ?
சென்னை : கடந்த ஒரு வாரமாக, ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் வேலைவாய்ப்பு விளம்பரம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
செய்தித்தாளில் அளிக்கப்பட்டிருந்த அந்த விளம்பரத்தில் 2021-ல், அதாவது கொரோனா பேட்ச்' என்று அழைக்கப்படும் பேட்ச்சில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை என்பது போல் இருந்தது. இதன் உண்மை தன்மை என்ன? ஹெச்டிஎப்சி வங்கி அளித்த விளக்கத்தை பார்ப்போம்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆங்கில விளம்பரம் ஒன்றை செய்திதாளில் வெளியானது. அதில் 28 வயதுக்குக் குறைவான ஆண்கள், பெண்கள் தேவை. 2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் வேலைக்குத் தகுதியில்லை. வேலைக்கான இடங்கள்: மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அந்த விளம்பரத்தில், நேர்காணல் ஆகஸ்ட் 3-ம் தேதி காலை 10 மணிக்கு மதுரையில் நடைபெறும்' என்று கூறப்பட்டிருந்தது.

கொரோனா பேட்ச்
இதில், 2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இந்த வேலைக்குத் தகுதியில்லை' என ஹெச்டிஎப்சி வங்கி விளம்பரத்தில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பலர் பார்த்தீர்களா, கொரோனா பேட்ச்க்கு வேலை இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இனி எல்லாம் இப்படித்தான் நடக்க போகிறது என்று கிண்டல் செய்ய தொடங்கினர்.

மீம்ஸ் வைரல்
மேலும் 2021-ல் தேர்ச்சி பெற்றவர்களை நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துக் கொள்ள மறுப்பதாகவும், இது மிகவும் சோதனையான காலம் அரசு தான்,இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். கொரோனாவால் ஆல் பாஸ் ஆனவர்கள் என்று கிண்டலுடன் மிகப்பெரிய அளவில் மீம்ஸ்கள் வைரலாகின.

எல்லோரும் விண்ணப்பிக்கலாம்
இந்தநிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதியன்று ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து, இந்த விளம்பரத்தைப் பகிர்ந்து, இது கொடூரமானது' என்று பதிவிட்டிருந்தார் அதற்கு ஹெச்.டி.எஃப்.சி நிர்வாகம், இது முற்றிலும் எழுத்துப் பிழை. பிழைக்காக வருந்துகிறோம். நாங்கள் குறிப்பிட்டிருக்கும் வயது வரம்புக்குள் இருப்பவர்கள், எந்த ஆண்டில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். நாங்கள் சரியான விளம்பரத்தை மீண்டும் வெளியிட்டுவிட்டோம்'' என்று ஆகஸ்ட் 3-ம் தேதி ஹெச்டிஎப்சி வங்கி கூறியிருந்தது.

எழுத்து பிழை
ஹெச்டிஎப்பி வங்கி செல்வது படியே, ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியான விளம்பரத்தில் எழுத்துபிழையை மாற்றி Not' என்ற வார்த்தையை Also' என்று மாற்றி வெளியிட்டிருந்தார்கள். அதாவது 2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இந்த வேலைக்குத் தகுதியானவர்கள் இல்லை' என்பதை 2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளும் இந்த வேலைக்குத் தகுதியானவர்கள்' என்று விளம்பரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சமாளிக்கிறதா?
எனினும் வங்கி தரப்பு சொல்வது உண்மைதானா, அல்லது சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்பு காரணமாக ஹெச்டிஎப்சி வங்கி இப்படி சமாளிக்கிறதா என்று நெட்டிசன்கள் மீண்டும் நோண்டாமல் இல்லை.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications