மிஸ் பண்ணாதீங்க.. தொடக்க சம்பளமே ரூ.50,000.. எச்பிசிஎல் நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் என்ஜினியரிங், சட்டம், சிஏ, எம்பிபிஎஸ், எம்பிஏ படித்தவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற வகையில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 2.80 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசின் பெட்ரோலியத்துறையின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் செயல்பட்டு வருகிறது. இது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. எச்பி(HP) அல்லது எச்பிசிஎல் (HPCL) என அழைக்கப்படும் இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Hindustan Petroleum Corporation Limited recruitment 2023 for 276 post including Chemical Engineer

மொத்தம் 21 பிரிவுகளில் 276 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அந்த பணியிடங்கள் என்னென்ன? யார் யார் விண்ணப்பம் செய்யலாம்? பணிக்கான மாதசம்பளம் எவ்வளவு? என்பது குறித்த முழுவிபரம் வருமாறு:

என்ஜினியர் பிரிவு: தற்போதைய அறிவிப்பின்படி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினியர் பணிக்கு 57 பேர், எலக்ட்ரிக்கல் என்ஜினியர் பணிக்கு 16 பேர், எலக்ட்ரிக்கல் என்ஜினியர் பணிக்கு 36 பேர், இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்ஜினியர் பணிக்கு 36 பேர், சிவில் என்ஜினியர் பணிக்கு 18 பேர், கெமிக்கல் என்ஜினியர் பணிக்கு 43 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சீனியர் ஆபிசர்: அதேபோல் சீனியர் ஆபிசர் பிரிவில் ஆபரேஷன் மற்றும் மெயின்டெனன்ஸ் -10, என்என்ஜி பிசினஸ் - 2, பயோபியூயல் பிளான் ஆபரேஷன், சிபிஜி பிளான்ட் ஆபரேஷன் பிரிவுகளுக்கு தலா ஒருவர், சேல்ஸ் - 30, நான்பியூயல் பிசினஸ் பிரிவுக்கு 4 பேர், ஈவி சார்ஜிங் ஸ்டேஷன் பிசினஸ் பிரிவுக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஜெனரல் மேனேஜர்: மேலும் தீத்தடுக்கு ஆபிசர் பணிக்க 8 பேர், குவாலிட்டி கண்ட்ரோல் ஆபிசர் பணிக்கு 9 பேர், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் பணிக்கு 16 பேர், சட்ட அலுவலர் பணிக்கு 5 பேர், சட்ட அலுவலர்(எச்ஆர்) பிரிவுக்கு 2 பேர், மெடிக்கல் ஆபிசர் பணிக்கு 4 பேர், ஜெனரல் மேனேஜர், வெல்பர் ஆபிசர் பணிகளுக்கு தலா ஒருவர்,

அப்டெவலப்மென்ட்: ஐடி இன்ப்ராஸ்டக்சர் மேனேஜ்மென்ட் பணிக்கு 2 பேர், Devops மேனேஜ்மென்ட், ஐடி செக்யூரிட்டி மேனேஜ்மென்ட் பணிக்கு தலா ஒருவர், அப்ளிகேஷன் டெவலப்மென்ட் பணிக்கு 3 பேர், குவாலிட்டி அசூரன்ஸ், நெட்வொர்க் மற்றும் கம்யூனிகேஷன், அனலிட்டிக்ஸ் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 276 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி: இந்த பணிகளுக்கு மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ட்ரூமென்டேஷன், கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, பயர் அன்ட் சேப்டி ஆகிய பிரிவுகளில் என்ஜினியரிங் முடித்தவர்கள், எம்பிஏ, எம்எஸ்சி கெமிஸ்ட்ரி, சிஏ, சட்டப்படிப்பு, எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். பணி அனுபவம் இல்லாதவர்களுக்கும் விண்ணப்பம் செய்யலாம்.

வயது வரம்பு: ஒவ்வொரு பணிகளுக்கும் வயது வரம்பு என்பது மாறுபடுகிறது. குறைந்தபட்சமாக விண்ணப்பத்தாரர்கள் 25 வயதும், அதிகபட்சமாக 50 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் வயது தளர்வு அளிக்கப்படும்.

மாதசம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.2.80 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். சம்பளம் என்பது பணிக்கு பணி மாறுபடுகிறது. இதுதொடர்பான விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 18 ம் தேதி இரவு 11.59 மணிக்குள் https://www.hindustanpetroleum.comஇணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1180 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் வழி தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+