ஐடி துறையில் இனி இவர்களுக்கு மட்டும் தான் வேலை கிடைக்கும்.. ஹெச்ஆர் ஆலோசகர் அருண் ராமசாமி பேட்டி
சென்னை: ஐடி துறையில் தற்போது வேலைக்கு ஆள் எடுப்பது குறைந்துவிட்டதாக மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் அருண் ராமசாமி தெரிவித்தார்.
ஐடி துறையில் செப்டம்பர் வரை 1059 தொழில் நுட்ப நிறுவனங்கள் 2.40 லட்சம் பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளன. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 23 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐடி துறையில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் அருண் ராமசாமி பிரபல தமிழ் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்.

அப்போதுது அவர் கூறுகையில், "இப்போது ஐடி துறையில் வேலைக்கு ஆள் எடுப்பது குறைந்துவிட்டது. உலகளாவியல பிரச்சனைகள் நிறைய நடந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேல் ஹமாஸ் போர் ஐடி நிறுவனங்களில் பெரிய வேலையிழப்பை ஏற்படுத்தி உள்ளதை மறுக்க முடியாது. இந்த போர், சப்ளை செயினை பாதித்திருக்கிறது. அதனால் எல்லா ஐடி நிறுவனங்களும் தங்கள் செலவுகளை குறைக்கின்றன. இதனால் வேலைக்கு ஆள் எடுப்பது குறைந்துள்ளது.
கல்லூரிகளில் இந்த ஆண்ட கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வான பலருக்கும் இன்னும் வேலைகளை ஐடி நிறுவனங்கள் வழங்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஆன் போர்டிங் செய்கின்றன . இந்த ஆன்போர்டிங் பிராசஸை டிசம்பர் ஜனவரியில் முடித்துவிட்டு அடுத்த பேட்ச்க்கு வேலைக்கு ஆள் எடுக்க தொடங்குவார்கள்.
இப்போது உள்ள மந்த நிலை, இப்படியே இருக்க போவது இல்லை. உறுதியாக அடுத்த காலாண்டில் நிச்சயம் மாறிவிடும் என்று நம்புகிறோம். 2024 தொடக்கத்தில் நிச்சயம் நிலைமை சரியாகும் என்று நினைக்கிறோம். ஐடி ஊழியர்கள் அவசரப்படக்கூடாது" இவ்வாறு கூறினார்.
ஐடி துறையில் வேலை இழப்பு குறித்து பேசிய அருண் ராமசாமி, "உலக அளவில் பல்வேறு நிறுவனங்கள் மிடில் லெவலில் உள்ள பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன..
40 வயதை தொட்ட ஐடி பணியாளர்கள் வேலையை விட்டு நிற்கக் கூடாது.. அவர்களுக்கு வேலை கிடைப்பது கடினம் ஆகும். அதிக ஊதியத்திற்கு அடுத்த நிறுவனத்திற்கு தாவுகிறவர்கள் கூட யோசித்தே செய்ய வேண்டும்,. சில நேரங்களில் மிகக் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு போக வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் நிலை உள்ளது. ஆனால் இதெல்லாம் தற்காலிகமாகவே இப்படி இருக்கும் . உறுதியாக ஐடி தொழில் மீண்டும் நல்ல நிலைக்கு வரும்.
கேம்பஸ் இன்டர்வியூவை பொறுத்தவரை, விப்ரோ, டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மகேந்திரா உள்பட பல்வேறு ஐடி நிறுவனங்கள், 3ம் ஆண்டு படிக்கும் அல்லது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்கின்றன. ஆனால் கடந்த ஆண்டு வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கே வேலை இன்னும் தரப்பவிடல்லை.. ஆன்போர்டிங் பிராசஸ் செய்து கொண்டிருக்கின்றன. எனவே தான் இந்த ஆண்டு வளாக நேர்காணல்கள் சரியாக நடக்கவில்லை.
இப்போது பெருநிறுவனங்கள் எப்படி தேர்வு செய்கின்ற என்றால், ஏஐ, பிளாக் செயின், சைபர் செக்யூரிட்டி என ஏதாவது ஒரு துறையில் சிறப்பு தகுதி உள்ளவர்களை தேர்வு செய்கின்றன..டிரெய்னி என்பது இல்லாமல் உயர் தகுதி உடையவர்களை மட்டும் அதிக ஊதியத்துக்கு வேலைக்கு தேர்வு செய்கின்றன. அதாவது ஸ்பெஷலிஸ்டாக உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. அதற்காகத்தான் தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.. பெரிய பெரிய நிறுவனங்களுடன் இணைந்து ஸ்பெசல் திறன்களை ஊக்குவிக்கிறது. எனவே இப்போதைக்கு நீங்கள் எடுக்கும் மதிப்பெண் உங்களுக்கு வேலை பெற்றுத்தராது. உங்களின் தனித்திறமை அதாவது ஸ்பெஷலிஸ்டாக சிறப்பு தகுதி வேலைக்கு போக விரும்பும் துறைகளில் பெற்றிருக்க வேண்டும் " என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications