ஐடிஐபி வங்கியில் வேலை.. 1,300 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! மாதம் 50 ஆயிரம் சம்பளம்!
சென்னை: நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஐடிபிஐயில் 1,300 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்று ஐடிபிஐ. மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி இந்த வங்கியில் பெருபான்மையான பங்குகளை வைத்துள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வங்கி கிளைகள் உள்ளன.

பணியிடங்கள் விவரம்:
சுமார் 20 ஆயிரம் வங்கி கிளைகளுடன் இந்த வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் காலியாக உள்ள 1,300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
* ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் மேனேஜர் (கிரேட் 0 பிராந்தியம்) -1,100
* அசிஸ்டண்ட் மேனேஜர்(கிரேடு ஏ) - 200 என மொத்தம் 1,300 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். அசிஸ்டண்ட் மேனேஜர் (கிரேடு ஏ) பணிக்கு வங்கிகள் அல்லது நிதி சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் இருப்பது அவசியம். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை அசிஸ்டண்ட் மேனேஜர் கிரேடு பணிக்கு 21 வயது முதல் 30 வயது வரையும் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனஜர் பணிக்கு (ஜேஏஎம்) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது 25 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
ஆன்லைன் டெஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு & சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் டெஸ்ட் கணிணி வழியில் நடைபெறும். ஆப்ஜெக்டிவ் முறையில் வினாத்தாள் இடம் பெற்று இருக்கும். 200 வினாத்தாள் இடம் பெற்று இருகும்.
அடுத்தகட்ட தேர்வுக்கு பெற உரிய கட் ஆப் பெறுவது அவசியம். தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட் ஆஃப் நிர்ணயிக்கப்படும். நேர்முகத் தேர்வை பொறுத்தவரை பொது அறிவு, வங்கி பற்றிய விவரங்கள் கேட்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பில் உரிய கல்வி சான்று, அனுபவம் சான்று ஆகியவை பெற்று இருக்க வேண்டும்.
சம்பளம்:
* ஆண்டுக்கு ரூ.6.14 லட்சம் முதல் 6.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
* உதவி மேலாளர் பணிக்கு மாதம் ரூ.36 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
-
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications