For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‛நோ எக்ஸாம்’.. 10 முடித்தாலே போதும்.. தபால் துறையில் 40,889 காலிப்பணியிடம்.. கைநிறைய சம்பளம்! ஆஹா

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியா முழுவதும் தபால் துறையில் காலியாக உள்ள 40,889 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி பிராஞ்ச் போஸ்டர் மாஸ்டர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள்.

மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை இயங்கி வருகிறது. இந்திய தபால்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2023ம் ஆண்டில் முதல் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தபால்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

மாதம் ரூ.63,200 சம்பளம்.. 8 ம் வகுப்பு முடித்தாலே போதும் தபால் துறையில் வேலை.. சென்னையிலேயே பணி!மாதம் ரூ.63,200 சம்பளம்.. 8 ம் வகுப்பு முடித்தாலே போதும் தபால் துறையில் வேலை.. சென்னையிலேயே பணி!

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

இந்திய தபால் துறையில் மொத்தம் 40,889 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் பிபிஎம் (Branceh Post Master)பிரிவு மற்றும் Assistant Branch Postmaster (ABPM/Dak Sevak) பிரிவில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பணிகள் காலியாக இருக்கின்றன.

 மாத சம்பளம் எவ்வளவு?

மாத சம்பளம் எவ்வளவு?

அதன்படி பிபிஎம் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.12 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.29,380 வரையும் சம்பளம் கிடைக்கும். ஏபிபிஎம்/Dak Sevak பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.24,470 வரை சம்பளம் வழங்கப்படும்.

 வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயதை எட்டியிருக்க வேண்டும். அதிகபட்சம் என்றால் விண்ணப்பத்தாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது முதல் 15 வயது வரை வயது தளர்வு உண்டு.

கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் மதிப்பெண் வாரியாக ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணிக்கு நியமனம் செய்யப்படுவார்கள். இதன்மூலம் எழுத்து தேர்வு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் indiapostgdonline.gov.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். பிப்ரவரி 16ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய கடைசிநாளாகும். இந்த பணிகளுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது.

பணி தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here

English summary
It has been decided to fill up 40,889 vacancies in postal department across India. Accordingly, the recruitment for the post of Branch Postmaster and Assistant Branch Postmaster is going to be held. Candidates will be recruited in all states of India including Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X