போஸ்ட் ஆபீஸ் வேலை! 10ம் வகுப்பு மார்க் போதும்.. 21,413 பணியிடம்.. அருமையான சான்ஸ்! உடனே விண்ணப்பிங்க
சென்னை: இந்திய அஞ்சல் துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அறிவிப்பான ஜிடிஎஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
அஞ்சல்துறையில் 21,413 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன் கூடிய இந்த பணியிடங்களுக்கு எக்சாம் எதுவும் வைக்கப்படாது. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தபால் துறை வெளியிட்டுள்ளது.

மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தபால் துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் கிராமின் டக் சேவக் எனப்படும் ஜிடிஎஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் விவரம்: பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் (BPM), அஸ்சிஸ்ண்டன் பிரஞ்ச் போஸ்ட்மாஸ்டர் (ABPM), டக் சேவக் என மொத்தம் 21,413 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 2,292 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியில் படித்து இருப்பது அவசியம். கணினி பற்றிய அறிவு இருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?:
* பிரஞ்ச் போஸ்ட் மாஸ்டர் பணிக்கு மாதம் ரூ.12,000/- to ரூ.29,380/- வரை வழங்கப்படும்.
* உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் ABPM / Dak Sevak - பணிக்கு ரூ.10,000/- to Rs.24,470/-வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை 18 வயதில் இருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் உண்டு. அதாவது எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் தங்கள் விரும்பிய மாநிலத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். பெண்கள் /எஸ்.சி /எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் இல்லை. ஆன்லைன் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 03.03.2025- கடைசி நாளாகும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://indiapostgdsonline.gov.in/ இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications