ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்யனுமா? வந்தாச்சு அறிவிப்பு.. சூப்பர் சான்ஸ்! விட்றாதீங்க
சென்னை: ராணுவத்தில் (Indian Army) சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அக்னி பாத் திட்டத்தின் கீழ் இந்த பணிக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பனவற்றை இங்கு காணலாம்.
ராணுவத்தில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த அக்னிபாத் திட்டம் என்பது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு செயல் திறன் அடிப்படையில் வீரர்கள் தக்க வைக்கப்படுவார்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வசிப்பவர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிவீர் (ஜெனரல் டூட்டி), அக்னிவீர் (தொழில்நுட்பம்), அக்னிவீர் (கிளார்க் / ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல்), அக்னிவீர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறும்.
கல்வித் தகுதி:
அக்னிவீர் (ஜெனரல் டூட்டி) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10 ஆம் வகுப்பு முடித்து இருப்பது கட்டாயம். 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். டிரைவர் பணிகளுக்கு எல்.எம்.வி லைசன்ஸ் வைத்து இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அக்னிவீர் (தொழில் நுட்பம்) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அறிவியல் பாடப்பிரிவு எடுத்து படித்து இருக்க வேண்டும். இயற்பியல், கணிதம் ஆங்கிலம் ஆகிய பாடங்களை கொண்ட பிரிவு எடுத்து படித்து இருக்க வேண்டும். குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் அவசியம்.
கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை விண்ணப்பதாரரக்ள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
17½ - 22 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 01-7-2005 முதல் 01-07-2009 தேதிக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை அக்னி பாத் திட்டம் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் வீரர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருக்க வேண்டும்.
இவர்களுக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.. 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுவார்கள்.
ஒப்பந்த காலம் முடிந்த பிறகு ரூ.10 லட்சம் வழங்கப்படும். அத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்படும். அக்னிபாத் திட்டத்தின் கீழ்நியமிக்கப்படும் வீரர்கள் 6 மாதம் பயிற்சி பெறுவார்கள். மீதமுள்ள 3.5 ஆண்டுகள் பணி புரிவார்கள்.
தேர்வு முறை:
ஆன்லைன் நுழைவுத்தேர்வு முதல் கட்ட தேர்வாக நடைபெறும். இரண்டாவது கட்டமாக உடல் தகுதி, உடல் அளவீட்டு தேர்வு, மருத்துவ பரிசோதனை நடைபெறும். விண்ணப்ப கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.
விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் (https://joinindianarmy.nic.in/) என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப பதிவு 13.02.2026 அன்று தொடங்கி 01.04.2026 அன்று முடியும். தேர்வு ஜூன் 01 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறலாம். தேர்வு நடைபெறும் தேதி தோராயமானது.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here












Click it and Unblock the Notifications