இந்திய கடற்படையில் வேலை.. டிகிரி முடிச்சவங்க விண்ணப்பிக்கலாம்.. ரூ.1 லட்சத்திற்கும் மேல் சம்பளம்
சென்னை: இந்திய கடற்படையில் 270 எஸ்.எஸ்.சி அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1 லட்சம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
நாட்டின் முப்படைகளில் ஒன்றாக கடற்படை உள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செயல்படும் கடற்படை இந்தியாவின் கடல் எல்லைகளை பாதுகாப்பை உறுதி செய்கிறது. 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய கடற்படை உருவாக்கப்பட்டது. இந்திய கடற்படையில் பல ஆயிரக்கணக்கான வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். கடற்படைக்கு சேவையாற்ற அவ்வப்போது ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது எஸ்.எஸ்.சி ஆஃபிசர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் விவரம்:
1. நிர்வாகப்( Executive Branch) பிரிவு: 154
2. கல்விப் பிரிவு: 15
3. தொழில்நுட்பப் பிரிவு: 101 என மொத்தம் 270 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து பி இ/ பி.டெக் முடித்து இருக்க வேண்டும். முதுகலை பட்டம் இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 60 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு நிகரான சிஜிபிஏ பெற்று இருக்க வேண்டும். நிர்வாக பிரிவு பணியிடத்தில் உள்ள 28 லாஜிஸ்டிக் பணிக்கு எம்.பி.ஏ, பி.எஸ்.சி/பி.காம், பி.எஸ்.சி (ஐடி), நிதி, லாஜிஸ்டிக்ஸ், சப்ளை செயின் ஆகிய பாடப்பிரிவில் பிஜி டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை ஜனவரி 02, 2001 முதல் ஜூலை 01, 2006க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிகப்படும்
சம்பளம் எவ்வளவு?:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,10,000- வரை சம்பளமாக கிடைக்கும். மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 25.02.2025- கடைசி நாளாகும்.
தேர்வு முறை:
மெரிட் லிஸ்ட் மற்றும் எஸ்.எஸ்.பி நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். joinindiannavy.gov.in. என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக வேண்டும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை முழுமையாக தெரிந்து கொண்ட பின்னர், தேவையான கல்வி தகுதி இருப்பதை உறுதி செய்த பிறகே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிறுத்தப்படுகிறது.
தேர்வு அறிவிப்பினை படிக்க; https://www.joinindiannavy.gov.in/files/job_instructions/1737630529_234929.pdf
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications