மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்.. மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம்
சென்னை: மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, பிஎஸ்சி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் என்பது மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனமாகும். பொதுத்துறை நிறுவனங்களில் மிகவும் லாபகரமாக இயங்கும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சில்லறை விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது.

டெல்லியை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம்? விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களைபார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
ஜூனியர் இன்ஜினியரிங் உதவியாளர்-IV ((Production) - 232
ஜூனியர் இன்ஜினியரிங் உதவியாளர்-IV (P&U) - 37
ஜூனியர் இன்ஜினியரிங் உதவியாளர்-IV (P&U-O&M) - 22 பதவிகள்
எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் - 14 பதவிகள்
என மொத்தம் 8-வகையான பணியிடங்களில் 394 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித்தகுதியானது மாறுபடும். 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, பிஎஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். உதாரணத்திற்கு ஜூனியர் என்ஜினியரிங் அசிஸ்டண்ட் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹெவி டிரைவிங் லைசன்ஸ் வைத்து இருக்க வேண்டும். கல்வித் தகுதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
31.12.2025 தேதிப்படி 18 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் 3 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் எடுத்துக்கொள்ளலாம். அதாவது, எஸ்சி எஸ்டி பிரிவினர் என்றால் 31 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?
ஜூனியர் என்ஜினியரிங்-IV பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 25,000 முதல் ரூ. 1,05,000/-வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியிலான ஆன்லைன் தேர்வு திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தில் சென்னையில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 09.01.2026 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://iocl.com/












Click it and Unblock the Notifications