ரயில்வே என்டிபிசி: 12ஆம் வகுப்பு முடித்தால் போதும்! டிக்கெட் கிளர்க் உள்ளிட்ட 3058 பணியிடங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியன் ரயில்வேயில் நான் டெக்னிக்கல் பணியிடங்களை (என்டிபிசி) நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது இதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. கமர்ஷியல் டிக்கெட் கிளர்க், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 3058 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்தியாவில் ரயில்வே துறை மிகப்பெரிய அரசு நிறுவனமாக உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வேயில் பணி செய்ய வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களின் லட்சியங்களில் ஒன்றாக உள்ளது.

job chennai employment

ரயில்வே பணிகளைப் பொறுத்தவரை கைநிறைய சம்பளம், சலுகைகள் என பலவற்றை ரயில்வே அள்ளிக்கொடுக்கிறது. இதனால், ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தால் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என நினைத்து பல லட்சக்கணக்கான தேர்வர்கள் ரயில்வே தேர்வுக்குத் தயாராகி வருகிறார்கள். ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வாயிலாக நிரப்பப்படுகின்றன.

ரயில்வே நடத்தும் தேர்வுகளில் என்.டி.பி.சி எனப்படும் நான்டெக்னிக்கல் பணியிடங்கள் தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் தற்போது 12ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட என்.டி.பி.சி பணியிடங்களை நிரப்ப ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

கமர்ஷியல் டிக்கெட் கிளர்க்: 2,424
அக்கவுண்ட்ஸ் கிளர்க்: 364
ஜூனியர் கிளர்க்: 163
ரயில் கிளர்க்: 77
என மொத்தம் 3,058 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி:

மேலே குறிப்பிட்ட 4 வகையான பணியிடங்களுக்கும் குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். ரயில் கிளர்க் பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது.

வயது வரம்பு:

18 வயது பூர்த்தி அடைந்தவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அரசு விதிமுறைகளைப் பின்பற்றி வயது வரம்பில் சலுகைகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் (Gen/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் (ஒபிசி) பிரிவினருக்கு 13 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் சலுகைகள் அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?

* கமர்ஷியல் டிக்கெட் கிளர்க் பணிக்கு அடிப்படை சம்பளமாக ரூ.21,700 முதல் ₹69,100 வரை வழங்கப்படும்.
* அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க், ரயில் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு 7வது ஊதியக் கமிஷன் லெவல் 2 படி ரூ.19,900 முதல் ₹63,200 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பை முழுமையாகப் படித்து உறுதி செய்த பிறகு ஆர்.ஆர்.பி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு சிபிடி எனப்படும் கணினி வழித் தேர்வு நடைபெறும்.

இரண்டு கட்டத் தேர்வுகள் நடைபெறும். டைப்பிங் திறன் தேர்வு (தேவைப்படும் பணியிடத்திற்கு மட்டும்) நடத்தப்படும். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

தேர்வர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி, பெண்கள், EBC பிரிவினருக்கு ரூ.250 கட்டணமாகும். தேர்வு எழுதிய பிறகு முழுக் கட்டணமும் திருப்பித் தரப்படும்.

விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 21.10.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+