எல்லாத்தையும் உடைச்சு தள்ளிட்டாங்க.. காத்திருக்கும் ஆபத்து.. ஐடி ஊழியர்களுக்கு வல்லுனர் வார்னிங்
சென்னை: உலக அளவில் வேலை மார்க்கெட் மோசமாக சரிந்து வருகிறது. இனி கார்ப்பரேட் உலகில் உங்களால் முன்னேறவே முடியாது, அதில் எதிர்காலமே இல்லை என்று போர்ட்ஃபோலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர் சவுரப் முகர்ஜி எச்சரித்து உள்ளார்.
அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் இனி நீங்கள் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தெல்லாம் முன்னேறவே முடியாது. உங்கள் வாழ்க்கையில் முன்னேற நீங்கள் தனியாக பிஸ்னஸ் செய்ய வேண்டும். தொழில் தொடங்க வேண்டும். ஒரே நிறுவனத்தில் ரிட்டயர்மெண்ட் வரை வேலை பார்த்தெல்லாம் வாழ்க்கையில் எதுவும் செய்ய முடியாது.
ஐடி துறையில் ஏஐ வந்துகொண்டு இருக்கிறது. ஏஐ காரணமாக ஐடி துறையில் எல்லாம் உடைய போகிறது. முக்கியமாக ஐடி துறையில் இருக்கும் படிநிலைகள் உடைய போகின்றன. அதை படிகள் என்று சொல்வார்கள். கீழே இருந்து நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வளர்ந்து செல்வது. அந்த படிநிலைகள் மொத்தமாக உடைத்து நொறுக்கப்பட்டு விட்டன. இனி அப்படி எல்லாம் வளர முடியாது.
ப்ளூ காலர் வேலைகள் கூட இருக்கும். ஆனால் வெள்ளை காலர் வேலைகள் இனி இருக்காது. இந்தியாவில் 1 கோடி ரூபாய்க்கு மேல் வருடாந்திர சம்பளம் வாங்குபவர்கள் 2 லட்சத்திற்கும் மேல் உள்ளனர். ஆனால் 70 சதவிகிதம் பேர் பிஸ்னஸ் செய்கிறார்கள். மாத வருமானம் வைத்து உங்களால் இனி வாழவே முடியாது. இன்னும் 5 வருடங்களில் மாத ஊழியத்தை நம்பி இருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று போர்ட்ஃபோலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர் சவுரப் முகர்ஜி எச்சரித்து உள்ளார்.

ஏற்கனவே எச்சரிக்கை
முன்னதாக இவர் விடுத்த எச்சரிக்கையில், உலகம் முழுக்க வேலை இழப்புகள் மோசமாகி வருகின்றன. இந்தியாவில் அந்த அளவிற்கு இல்லை. அதாவது இந்தியாவில் 18-25 வயது உள்ளவர்களுக்கு சிக்கல் இல்லை. அவர்களுக்கு குறைந்த சம்பளத்தில் கூட வேலைகள் கிடைக்கும். ஆனால் 30 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் பெரிய சிக்கல். ஆம் 30 வயதை தாண்டியவர்கள் வேலை இழப்புகளை சந்திக்கலாம்.
இந்தியாவில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் வேலை இழப்புகள் ஏற்படலாம். ஆனால் அதை இந்தியர்கள் சரியாக திட்டமிடவில்லை. தங்களின் பொருளாதாரத்தை சரியாக திட்டமிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் மிடில் கிளாஸ் மக்கள் கடனில் இருக்கிறார்கள். மிடில் கிளாஸ் கடன் என்பது இந்தியாவிலேயே மிக மோசமான விஷயம்.
மிடில் கிளாஸ்களுக்கு சிக்கல்
மற்ற நாடுகளில் மிடில் கிளாஸ் மக்கள் கொஞ்சம் சேமிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மிடில் கிளாஸ் கடன் மோசமாக உள்ளது. அவர்கள் தங்களுக்கு வரப்போகும் ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள். தங்களுக்கு என்ன நடக்க போகிறது என்பது அவர்களுக்கு இன்னமும் தெரியவில்லை. நிலைமை மோசமாக போகிறது என்பதை அவர்கள் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள்.
கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான கடனில் இருக்கிறார்கள் மிடில் கிளாஸ் மக்கள். இதை பற்றி யாரும் பேசுவது இல்லை.
மக்கள் பலர் செய்யும் பணிகள், குறிப்பாக HR போன்ற துறைகள் AI மூலம் கடுமையாக பாதிக்கப்படும். முதலில் IT சேவை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், பின்னர் ஊடக நிறுவனங்கள் போன்றவை மாற்றப்படும். நிலையான அலுவலக வேலைகள் இனி இருக்காது. ஃப்ரீலான்ஸ், கிக் அடிப்படையிலான வேலைகளுக்கு நிறுவனங்கள் விரைவாக மாறக்கூடும்.. அடுத்த 1-3 ஆண்டுகளில் மக்கள் இதற்கான தயாரிப்புகளை செய்ய வேண்டும், என்று போர்ட்ஃபோலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர் சவுரப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications