ரூ.15 லட்சம் வரை சம்பளம் + வீட்டில் இருந்தே வேலை.. 30,000+ காலியிடங்கள்.. ஆக., 25 கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்போசிஸ், அக்சென்சர் உள்பட பல முன்னணி IT நிறுவனங்கள் மற்றும் ஜியோ, பிளிப்கார்ட் உள்பட பிற Non IT நிறுவனங்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு அனுபவம் வேண்டாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 25ம் தேதி கடைசி நாளாகும். கடைசி தேதி நெருங்குவதால் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.15 லட்சம் வரை வழங்கப்பட உள்ளதோடு, அவர்கள் அலுவலகம் சென்றும் அல்லது வீட்டில் இருந்தும் பணியாற்றலாம்.

இப்போது டிகிரி, இன்ஜினியரிங் படிப்பை படித்தவர்கள் அனைவருக்கும் தங்களின் தகுதிகேற்ப வேலை கிடைக்கிறதா? என்றால் அது கேள்விக்குறியாக தான் உள்ளது. இதனால் ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைத்த பணிகளை செய்து வருகின்றனர்.

it jobs jobs

இந்நிலையில் தான் IT மற்றும் Non IT துறைகளில் செயல்பட்டு வரும் ஏராளமான நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள் குவிந்துள்ளன. இதுதொடர்பான அறிவிப்பை Internshala சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. Internshala சைட் என்பது கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகளை வழங்கும் ஒரு இணையதளமாகும்.

இந்த இணையதளத்தில் பிரபல நிறுவனங்களில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும். அந்த வகையில் தற்போது Internshala தளத்தில் frehser Jobs Fest 2025 என்ற பெயரில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 3 ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இன்போசிஸ், அக்சென்ச்சர் (Accenture), ஃப்ளிப்கார்ட், பிளிங்கிட் (Blinkit), இஒய்(EY), ஜியோ உள்பட பல முன்னணி நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. இன்ஜினியரிங், டிகிரி உள்பட எந்த படிப்புகளை படித்து இருந்தாலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது.

பணி அனுபவம் உள்ளவர்கள், இப்போது தான் கல்லூரி படிப்பை முடித்து அனுபவம் இல்லாதவர்கள் என்று அனைவருக்கும் வேலைகள் தயாராக உள்ளது. அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு வேலையை பொறுத்து சம்பளம் வழங்கப்பட உள்ளது.

இங்கு ஒவ்வொரு நிறுவனங்களை பொறுத்து பணிச்சூழல் மாறுகிறது. சில நிறுவனங்களில் அலுவலகத்தில் இருந்து தான் வேலை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் வீட்டில் இருந்தும் பல நிறுவனங்கள் பணியாற்ற அனுமதி கொடுக்கின்றன. இன்னும் சில நிறுவனங்களில் Hybrid முறையில் அலுவலகம் + வீட்டில் இருந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என்று அனைவரும் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கான அறிவிப்பு கடந்த 18 ம் தேதி வெளியானது. விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 25 கடைசி நாளாகும். கடைசி தேதி நெருங்குவதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+