இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை.. 2,757 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்!
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,757 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு 12 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு என்ன, எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம், எண்ணெய் விநியோகம் மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபடுகிறது. நாட்டின் லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

பணியிடங்கள் விவரம்:
இந்தியா மட்டும் இன்றி இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
டிரேடு அப்ரெண்டீஸ் - உதவியாளர் ஆபரேட்டர் (வேதியியல் ஆலை) துறை - வேதியியல் - 17
மெக்கானிக்கல் - 04
(பாய்லர்) துறை - மெக்கானிக்கல் - 08
டெக்னிக்கல் அப்ரெண்டீஸ் - வேதியியல் - 20
மெக்கானிக்கல் - 11
மின்சாரம் - 11 என மொத்தம் 9 மண்டலங்களில் உள்ள 2,757 அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.
கல்வி தகுதி:
12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி, பிஏ, பிகாம் உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை 30.11.2025- தேதிப்படி 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளை பின்பற்றி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி 3 ஆண்டுகளும், பொதுத்துறை மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். அதாவது எஸ்சி எஸ்டி பிரிவினர் என்றால் 29 வயது வரையும், ஒபிசி பிரிவினர் என்றால் 27 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்ளவும். https://iocl.com/apprenticeships என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
* விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 28.11.2025
* விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.12.2025.
* சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள்; 02.01.2026 to 07.01.2026
* தேர்வு அறிவிப்பினை படிக்க: https://iocl.com/apprenticeships
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications