இந்திய அஞ்சல் துறையில் வேலை.. எக்ஸாம் இல்லை! டிகிரி தகுதி தான்.. கைநிறைய சம்பளம்.. விட்றாதீங்க
சென்னை: இந்திய அஞ்சல் துறையில் (India Post) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 17 பணியிடங்கள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 348 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு கிடையாது. மெரிட் லிஸ்ட் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.
இந்திய அஞ்சல் துறை என்பது நாட்டின் மிகப்பெரிய அரசு துறைகளில் ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் தபால் சேவை மற்றும் போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சேவைகளை இந்திய அஞ்சல் துறை வழங்கி வருகிறது.

அஞ்சல் துறையை பொறுத்தவரை மத்திய அரசுக்கு சொந்தமானது என்பதால் இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கின்றன. படித்து முடித்து அரசு பணி கனவுடன் இருக்கும் தேர்வர்கள் அஞ்சல் துறை வெளியிடும் தேர்வு அறிவிப்பினை ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்வு அறிவிப்பினை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள்:
ஜிடிஎஸ் எக்ஸிகியூட்டிவ்: GDS as Executive at IPPB - மொத்தம் 348 காலிப்பணியிடங்கள் உள்ளன. மாநில வாரியாக பார்த்தால் தமிழகத்தில் 17 பணியிடங்களும், கேரளாவில் 06 பணியிடங்களும், கர்நாடகாவில் 19 பணியிடங்களும் என மொத்தம் 22 மாநிலங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன.
அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 40 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மண்டல வாரியாக பார்த்தால் தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், மானாமதுரை, சென்னை, உடையார் பாளையம், தல்லாகுளம், தேனி, சேரிங் கிராஸ், சேலம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் தலா 1 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவம் எதுவும் தேவையில்லை. விண்ணப்பதாரர்களுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் இருத்தல் கூடாது. வயது வரம்பை பொறுத்தவரை 01.08.2025 தேதியிட்டு கணக்கிடப்படும். அன்றைய தேதியில் 20 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இந்திய வருமான வரி சட்ட விதிகளின் வரிகள் உள்ளிட்டவைகள் பிடித்தம் செய்யப்படும். சம்பள உயர்வை பொறுத்தவரை ஊழியர்களின் செயல் திறன் உள்ளிட்டவை அடிப்படையில் வழங்கப்படும்.
சம்பளத்தை தவிர இதர சலுகைகள் அதாவது போனஸ், அலவன்ஸ் எதுவும் வழங்கப்படாது. பணிக்காலத்தை பொறுத்தவரை ஓராண்டு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். ஊழியர்களின் செயல்பாட்டில் திருப்தி இருந்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
தேர்வு முறை:
டிகிரியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எனினும், தேவைப்பட்டால் ஆன்லைன் டெஸ்ட் வைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
விருப்பம் உள்ள தேர்வர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டணம் எக்காரணம் கொண்டு திருப்பி அளிக்கப்படாது.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://www.ippbonline.com/documents/20133/133019/1759925784182.pdf
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
IT Jobs: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நாளை இண்டர்வியூ.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications