IT JOBS: சென்னை உள்பட 4 இடங்களில் பணி.. எம்பிஏ படித்தோருக்கு ஜாக்பாட்.. அழைக்கும் TCS
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் பிசினஸ் அனலிஸ்ட் பணிக்கு சென்னை மற்றும் பெங்களூரில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த ணிக்கு உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். அதன்பிறகு இண்டர்வியூவில் பங்கேற்று வேலையை பெறலாம்.
டாடா குழுமத்தை சேர்ந்த ஐடி நிறுவனம் தான் டிசிஎஸ். நம் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தற்போதைய அறிவிப்பில் பிசினஸ் அனலிஸ்ட் (Business Analyst) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம்செய்வோர் எம்பிஏ படிப்பை டயர் 1 கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் படித்திருக்க வேண்டும்.
அதேபோல் என்டர்பிரைஸ் பிளாட்பார்ம்ஸ், பிசினஸ் ஆபரேஷன்கள் மற்றும் ஐடி சிஸ்டம்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.செகன்டரி ரீசர்ஸ், அனலிட்டிக்கல், கன்சல்டிங், பிரச்சனைகளை தீர்க்குமு் திறன், டேட்டா டிரைவன் டிசிசன் மேக்கர் உள்ளிட்ட திறமை இருக்க வேண்டும். அதேபோல் ஸ்டாக்ஹோல்டர் மேனேஜ்மென்ட், கஸ்டமர் பேசிங், நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும்.
அதேபோல் கஸ்டமர்களிடம் கான்செப்ட் பற்றிய கிளியராக புரிந்து கொண்டு பதிலளிக்கும் திறமை இருக்க வேண்டும். எந்த இடத்தில் பணியாற்ற வேண்டி இருந்தாலும் இடமாற தயாராக இருக்க வேண்டும். எம்எஸ்ஆபிஸில் எக்ஸல், பவர்பாயிண்ட் உள்பட பிற விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில்பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம் எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் குறித்து அழைக்கப்படுவார்கள். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 4 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னை, மும்பை, டெல்லி, என்சிஆர் ஆகிய இடங்களில் உள்ள டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications