மத்திய அரசு வங்கியில் வேலை.. மாதம் 93 ஆயிரம் சம்பளம்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் மேனேஜர் மற்றும் விவசாய அக்ரிகல்சர் மேனேஜர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி. இந்த வங்கியானது 1908-ல் நிறுவப்பட்டு, தனிப்பட்ட மற்றும் வணிக வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் இதன் கிளைகள் உள்ளன. இந்த நிலையில் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் 190 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடன் மேலாளர் (Credit Manager) மற்றும் விவசாய மேலாளர் (Agriculture Manager) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் விவரங்களை பார்க்கலாம்.

job bank job Employment chennai

பணியிட விவரம்:

* கடன் மேலாளர் பதவிக்கு 130 இடங்களும்,
* விவசாய மேலாளர் பதவிக்கு 60 இடங்களும் உள்ளன.
* தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அகில இந்திய அளவில் பணியமர்த்தப்படுவார்கள்.
* இது ஒரு நிரந்தர அடிப்படையிலான பணி.

கல்வித் தகுதி:

கல்வித் தகுதியைப் பொறுத்தவரை (2025 அக்டோபர் 10 நிலவரப்படி),
* கடன் மேலாளர் பதவிக்கு குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அவசியம். எஸ்சி/எஸ்டி/ஓபிசி/பிடபிள்யூபிடி பிரிவினருக்கு 55% மதிப்பெண்கள் போதுமானது.
* மாற்றாக, சிஏ/சிஎம்ஏ/சிஎஃப்ஏ/எம்பிஏ (நிதி) போன்ற தொழில்முறை தகுதிகளும் ஏற்றுக்கொள்ளப்படும். இப்பதவிக்கு, அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் கிளை மேலாளர் அல்லது கடன் மதிப்பீட்டில் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம் தேவை.

* விவசாய மேலாளர் பதவிக்கு, விவசாயம், தோட்டக்கலை, பால்வளம், கால்நடை வளர்ப்பு, வனவியல், கால்நடை அறிவியல், விவசாயப் பொறியியல், மீன்வளம் போன்ற துறைகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* எஸ்சி/எஸ்டி/ஓபிசி/பிடபிள்யூபிடி பிரிவினர் 55% மதிப்பெண்களுடன் விண்ணப்பிக்கலாம்.
* இப்பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் அதிகாரியாக மூன்று வருட பணி அனுபவம் அவசியம்.

வயது வரம்பு:

* விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 2025 அக்டோபர் 10 நிலவரப்படி, குறைந்தபட்சம் 23 முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

* அரசு விதிகளின்படி, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பிடபிள்யூபிடி (பொது/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், பிடபிள்யூபிடி (எஸ்சி/எஸ்டி) பிரிவினருக்கு 15 ஆண்டுகளும், பிடபிள்யூபிடி (ஓபிசி) பிரிவினருக்கு 13 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி தளர்வு உண்டு.

சம்பளம் எவ்வளவு?

கடன் மேலாளர் மற்றும் விவசாய மேலாளர் ஆகிய இரண்டு பதவிகளுக்கும் மாத ஊதியம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, திரையிடல், நேர்காணல் மற்றும் இறுதித் தகுதிப் பட்டியல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் மூலமாக செலுத்தப்பட வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.100 ஆகும். மற்றவர்களுக்கு ரூ.850 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

இந்த மத்திய அரசு பணிக்கு, ஆர்வமுள்ளவர்கள் https://punjabandsindbank.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். வரும் அக்டோபர் 10, 2025 அன்று கடைசி நாள் ஆகும்.

விண்ணப்பிக்கும் முன், பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தங்களின் தகுதி வரம்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தேர்வு அறிவிப்பை படிக்க: Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+