உச்ச நீதிமன்றத்தில் வேலை.. மாதம் 61 ஆயிரம் சம்பளம்! டிகிரி + டைப்பிங் தெரியுமா? விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் உயரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court Jobs) அலுவல் சார்ந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. கோர்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மாதம் ரூ.61,000 சம்பளம் வழங்கப்படும். பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

நாட்டில் உயரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன்றம் தலைநகர் டெல்லியில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அலுவலக பணிகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த காலிப்பணியிடங்களை அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிட்டு உச்ச நீதிமன்றம் நிரப்பி வருகிறது.

Job Jobs Employment chennai

பணியிடங்கள் விவரம்:

அந்த வகையில்தான் தற்போது கோர்ட் மாஸ்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, அனுபவம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

கோர்ட் மாஸ்டர் பணி பிரிவில் மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வித் தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஷார்ட் ஹேண்ட் தெரிந்து இருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் எழுதும் திறன் அவசியம். கணினி அறிவும் அவசியம்.

கல்வித் தகுதி என்ன?

டைப்பிங் திறனை பொறுத்தவரை ஒரு நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் அடிக்க தெரிந்து இருக்க வேண்டும். கல்வி தகுதியுடன் அனுபவமும் கோரப்பட்டுள்ளது. தனி செயலர்/ சீனியர் பெர்சனல் அசிஸ்டண்ட்,/ பெர்சனல் அஸ்சிஸ்டண்ட்/ அரசு அல்லது பொதுத்துறை அமைப்புகளில் சீனியர் ஸ்டெனோகிராபர் ஆக குறைந்தது 5 ஆண்டுகள் பணி செய்து இருப்பது கட்டாயம். தேர்வர்கள் கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

வயது வரம்பு, சம்பளம்:

குறைந்த பட்ச வயது 30 ஆகவும் அதிகபட்ச வயது 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.67,700 முதல் வழங்கப்படும்.

தேர்வு முறை:

சுருக்கெழுத்து (ஆங்கிலம்) தேர்வு, கொள்குறி வகை எழுத்து தேர்வு, டைப்பிங் திறன், தேர்வு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,500 செலுத்த வேண்டும். எஸ்சி /எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.750 கட்டணம் ஆகும்.

ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 15.09.2025 கடைசி நாளாகும். (https://www.sci.gov.in/) என்ற இணையதளம் வாயிலாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். பிற விவரங்களை தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்ளவும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+