தேதி முடிய போகுது! இந்திய விமான நிலைய ஆணையத்தில் சூப்பர் வேலை.. 119 பணியிடங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள 119 ஜூனியர் அசிஸ்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 2 நாட்களே இருக்கிறதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (AAI) என அழைக்கப்படும் இந்திய விமான நிலைய ஆணையம், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. விமான நிலையங்களின் நிர்வாகம் உள்ளிட்ட பணிகளை இந்த ஆணையம் தான் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான் விமான நிலைய ஆணையங்களில் காலியாக உள்ள 119 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்...

பணியிடங்கள் விவரம்:
ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் (Fire Service)-73 பணியிடங்கள்
ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் (Office) -25
ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் (Electronics)-25
ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் (Accounts)-19
ஆகிய 119 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
கல்வி தகுதி: ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் (Office) பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து இருந்தால் போதும். அக்கவுண்ட்ஸ் பணிக்கு பி.காம் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். Fire Service பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ இன் மெக்கானிக்கல்/ஆட்டோ மொபைல்/ Fire ஆகியவை முடித்து இருக்க வேண்டும். அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் அவசியம். கல்வி தகுதி குறித்த தெளிவான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதுடையோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம்: சம்பளத்தை பொறுத்தவரை 31 ஆயிரம் முதல் 1.10 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். கணிணி வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு மையங்களை பொறுத்தவரை சென்னை, மதுரை, பெல்காம், பெங்களூர், கலிகட், கொச்சின், ஐதராபாத், விஜயவாடா ஆகிய நகரங்களில் நடைபெறும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள்தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவுகள் ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். தேர்வு அறிவிப்பை தெரிந்து கொள்ள https://www.aai.aero/en/recruitment/release/396317 இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வரும் 27.12.2023 அன்று முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 26.01.2024 ஆகும். விண்ணப்பிக்க 2 நாட்களே இருக்கிறதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications