சென்ட்ரல் வங்கியில் வேலை.. 1000 பணியிடங்கள்.. 85 ஆயிரம் சம்பளம்! டிகிரி முடிச்சவங்களுக்கு செம சான்ஸ்
சென்னை: சென்ட்ரல் வங்கியில் காலியாக உள்ள கிரெடிட் ஆஃபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர். விண்ணைப்பிக்க எப்போது கடைசி நாள், விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட விவரங்களை இங்கே காணலாம்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று சென்ட்ரல் வங்கி. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. நிதி அமைச்சகத்தின் செயல்படும் இந்த வங்கியில் தற்போது காலியாக உள்ள கிரெடிட் ஆஃபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: கிரெடிட் ஆபிசர் - 1,000 பணியிடங்கள் நிரப்பப் படுகிறது.

கல்வித் தகுதி: கல்வித் தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் என்றால் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் வேலை! தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.. 1 லட்சம் சம்பளம்
வயது வரம்பு & சம்பளம்: 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, 1994 நவம்பர் 30 க்கு முன்பாகவோ, 2004 நவம்பர் 30 க்கு பிறகோ பிறந்தவராக இருத்தல் கூடாது. எஸ்சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 48,480 முதல் 85,920 வரை சம்பளமாக கிடைக்கும்.
தேர்வு முறை: விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் தேர்வை பொறுத்தவரை கொள்குறி வகை மற்றும் விரிவான கட்டுரை வகையில் எழுதும் வகையிலும் தேர்வு இருக்கும். நெகட்டிவ் மார்க் கிடையாது. 2 மணி நேரம் ஆன்லைன் தேர்வு நடைபெறும்.
அரசு கல்லூரிகளில் வேலை.. உதவி பேராசிரியர் பணியிடங்கள்! மாதம் 2 லட்சம் சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க
ஆன்லைன் டெஸ்டில் பெறும் மதிப்பெண்களை பொறுத்து நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத்தேர்வில் 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் 50 சதவிகிதமாகும். எஸ்.சி/எஸ்.டி/ஒபிசி பிரிவினருக்கு 45 சதவிகித மதிப்பெண்கள் பெற்றால் போதும். ஆன்லைன் டெஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications