சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வேலை.. 25 பணியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள் என்ன? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சென்னை பெரம்பூரில் ஐசிஎப் எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலை உள்ளது. ரயில்வேக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில், ரயில் பெட்டி தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுத்துறை நிறுவனமான ஐசிஎப்பில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஐசிஎப் தொழிற்சாலையில் விளையாட்டு வீரர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்..

பணியிடங்கள் விவரம்: 25 காலிப்பணியிடங்கள் உள்ளன. கால்பந்து, பேஸ்கட் பால், கைப்பந்து, தடகளம், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன. இது குறித்த முழு விவரங்களை விண்ணப்பதாரர்கள், ஐசிஎப்பின் அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
கல்வி தகுதி:
சீனியர் கிளர்க் - ஏதாவது ஒரு டிகிரி
ஜூனியர் கிளர்க் - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
டெக்னிஷியன் கிரேடு - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது போக விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் உள்ளிட்டவையும் அவசியம்.
வயது வரம்பு: 01.01.2025 அன்றைய தேதிப்படி 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறையை பொறுத்தவரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் விளையாட்டில் பங்கேற்று சாதனை செய்ததற்கான சான்றிதழ் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://pb.icf.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 11.11.2024 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 10.12.2024 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://pb.icf.gov.in/sportsr_24/notification_open2425.pdf
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications