டிகிரி எல்லாம் தேவையில்லை.. 8ஆம் கிளாஸ் படித்திருந்தாலே போதும்! 15 ஆயிரத்திற்கு மேல் ஊதியத்தில் வேலை
கரூர்: கரூர் மாவட்டத்தில் நுகர்வோர் குறைதீர் ஆணைய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
இன்று படித்துவிட்டு நிறைய இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். சிலர் தங்களுக்கு தகுந்த வேலை கிடைக்க வேண்டி காத்திருக்கிறார்கள். சிலர் கிடைத்த வேலையை செய்கிறார்கள். இன்னும் சிலர் சுய வேலைவாய்ப்புகளில் ஈடுபடுகிறார்கள்.

அரசும் தேர்வாணையம் மூலம் வேலைவாய்ப்புகளை கொடுப்பது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துகிறது. இது போல் வேலைவாய்ப்புகளை விளம்பரப்படுத்தியும் வருகிறது. இதை இளைஞர்கள் பார்த்து விண்ணப்பித்து தகுதி இருந்தாலே வேலை கிடைத்தும்.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் நுகர்வோர் குறைதீர் ஆணைய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பதவி காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு ஒரே ஒரு காலியிடம் உள்ளது.
இந்த பதவிக்கு இன சுழற்சி அடிப்படையில் தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
வயது வரம்பு- ஜூலை 1 ஆம் தேதி அன்று 18 வயது முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கான ஊதிய விகிதம் ரூ 15, 700 ஆகும். இத்துடன் அகவிலைப்படி, வீட்டு வாடகை படி உள்ளிட்டவையும் வழங்கப்படும். விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ 50 க்கான ஸ்டாம்ப் ஒட்டி பதிவு தபால் மூலம் இன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்,

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், 107/1, நவலடியாள் காம்பளக்ஸ் முதல் தளம், அண்ணா நகர், தான்தோன்றிமலை, கரூர்- 639 005.
Self attested செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை மட்டும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் அசல் ஆவணங்களை அனுப்பக் கூடாது. நேர்முகத் தேர்வு குறித்து தபால் வழியாகவோ தொலைபேசி வாயிலாகவோ, ஈமெயில், வாட்ஸ் ஆப் மூலமாகவே தெரிவிக்கப்படும். இன்றுதான் கடைசி தேதி, சீக்கிரம் அப்ளை செய்ங்க. டிகிரி, டபுள் டிகிரியெல்லாம் தேவையில்லை, 8ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.
-
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications