தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் வேலை.. 574 காலிப்பணியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், எப்படி விண்ணப்பிப்பது? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ 25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.

தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் (Guest Lecturer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 574 காலிப்பணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளன. தற்காலிக அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ 25 ஆயிரம் முதல் சம்பளமாக வழங்கப்படும்.

jobs-in-tamil-nadu-government-arts-colleges-574-vacancies-find-out-who-is-eligible-to-apply

கல்வித் தகுதி

கல்வி தகுதியை பொறுத்தவரை முதுகலை பட்டத்துடன் பிஎச்டி/ NET/ SLET/ SET ஆகிய ஏதேனும் ஒரு தகுதி பெற்று இருக்க வேண்டும். முதுகலை பட்டத்தில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / மாற்றுத்திறனாளி பிரிவினர் ஆகியோர் 50 சதவீத மதிபெண் பெற்றிருத்தல் போதுமானது.

வயது வரம்பு

வயது வரம்பு 01.7.2025 தேதியிட்டு கணக்கிடப்படும். 57 வயதுக்கு உட்பட்டோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறையை பொறுத்தவரை கல்வி தகுதி மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து தெரிந்து கொள்வது அவசியம். பாட வாரியாக உள்ள காலிப்பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வுக் கட்டணம் எவ்வளவு

தேர்வுக்கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதும். ஆன்லைன் முறையில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள் 21.07.2025 ஆகும். விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 04.08.2025 - 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அறிவிப்பினை தேர்வர்கள் https://tngasa.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளும் இந்த இணையதளத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

விண்ணப்பதார்கள் விருப்பமான மாவட்டங்களை தேர்வு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.. விண்ணப்பிக்கும் பொது "Region / மண்டலம்" பட்டனை கிளிக் செய்து, Chennai, Coimbatore, Madurai, Dharmapuri, Thanjavur, Trichy, Thirunelveli Vellore இருந்து எந்த ஒரு மண்டலத்தையும் தேர்வு செய்யவும். மண்டலத்தைக் தேர்வு செய்த பிறகு, அதில் உள்ள மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து தெரிந்து கொள்ள, இணையதளத்தில் உள்ள 'Vacancy Positions / காலிப் பணியிடங்கள்' பகுதியில் சென்று, மாவட்ட வாரியான பணியிடங்களை சரிபார்க்கலாம்.

இது, நீங்கள் தேர்வு செய்யும் மாவட்டங்களில் பணியிட வாய்ப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும். பின்னர், தேர்ந்தெடுத்த மண்டலத்திலிருந்து அதிகபட்சமாக மூன்று மாவட்டங்களை தேர்வு செய்து "Submit / சமர்ப்பிக்க" பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பின், உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது எனக் குறிப்பு காண்பிக்கப்படும். இதற்கு பின்னர் தேர்வுக் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+