அரசு பள்ளிகளில் சமையல் உதவியாளர் பணி.. 146 காலியிடங்கள்! 10 ஆம் வகுப்பு போதும்.. தூள் கிளப்புங்க
சென்னை: கிருஷ்ணகிரியில் அரசு பள்ளிகளில் சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 146 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பன உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் உள்ள இடத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டருக்குள் வசிக்கும் பெண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 146 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளனர். வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனச்சுழற்சி வாரியாக தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு?
மாதிரி விண்ணப்பப் படிவங்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டாரங்கள் மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட இணையதள முகவரி www.krishnagiri.nic.in-ல்
செய்தி, விண்ணப்ப மாதிரி, இனச்சுழற்சி வாரியாக காலியாக உள்ள பள்ளி சத்துணவு மையங்களின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
* சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பதவிக்கு மாதமொன்றுக்கு ரூ.3,000/- தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும். * பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்குப்பின் சிறப்பு காலமுறை ஊதியத்தில் ஊதிய நிலை 1 (Level of Pay ரூ.3000 - 9000) வழங்கப்படும்.
வயது வரம்பு
இப்பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
* பழங்குடியினர் - 18 வயது முதல் 40 வயது வரை
* விதவை, கணவரால் கைவிடப்பட்டவர் - 20 வயது முதல் 40 வயது வரை
* பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் - 21 வயது முதல் 40 வயது வரை
குறைந்தபட்ச கல்வித்தகுதி:
10 ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்தவராக இருக்க வேண்டும். நியமனம் கோரும் சத்துணவு மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3.00 கி.மீ-க்குள் இருக்க வேண்டும். (ஊராட்சி - குற்றிராமம், வருவாய் கிராமம் போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை)
மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு - 4% (உரிய அடையாள அட்டையுடன்). கீழ்க்கண்ட குறைபாடு உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்:
* குறைவான பார்வைத்திறன் (மூக்குக்கண்ணாடி மூலம் சரிசெய்யப்பட்டது)
* காதுகேளாதோர் (கருவி பொருத்தப்பட்டவர்)
* குள்ளத்தன்மை கொண்டவர்
* உடல் இயக்க குறைபாடு (ஒரு கால்)
* குணப்படுத்தப்பட்ட தொழுநோய் (40% கைகளின் முழுச்செயல்பாடு)
* திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்
* குறிப்பிட்ட கற்றுத் திறன் குறைபாடு (மிதமான)
* விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 25% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் உரிய விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 17.12.2025 மாலை 5.45 மணி. அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்களின் நகல்கள்:
* பள்ளி மாற்றுச் சான்றிதழ்
* SSLC மதிப்பெண் சான்றிதழ்
* குடும்ப அட்டை
* இருப்பிடச் சான்று
* ஆதார் அட்டை
* சாதிச்சான்று
* விதவை/கணவரால் கைவிடப்பட்டோர்/ஆதரவற்ற பெண்கள் சான்று
* மாற்றுத்திறனாளி சான்றிதழ்
அஞ்சல் துறையின் காலதாமதங்களுக்கு துறை பொறுப்பல்ல. விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.
உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். காரணமின்றி நியமன அறிவிப்பை ரத்து/திருத்த/திரும்ப பெற மாவட்ட ஆட்சியருக்கு உரிமை உண்டு. நேர்முகத் தேர்வு வரும் நபர்களுக்கு பயணப்படி வழங்கப்படமாட்டாது.
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications