எல்ஐசி நிறுவனத்தில் வேலை.. 841 அதிகாரி பணியிடங்கள்.. மாதம் ரூ.88 ஆயிரம் சம்பளம்.. விட்றாதீங்க
சென்னை: எல்.ஐ.சி நிறுவனத்தில் காலியாக உள்ள 841 உதவி நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 88,635 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி. இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்.ஐ.சி நிறுவனத்தில் நாட்டின் முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன.

ஆயிரக்கணக்கான ஊழியர்களுடன் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியில் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்ப படுகின்றன. அந்த வகையில் தற்போது ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
உதவி நிர்வாக அதிகாரிகள், உதவி பொறியாளர்கள் (சிவில், எலக்ட்ரிக்கல்) உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்ப படுகின்றன. மொத்தம் 841 காலிப்பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதியை பொறுத்தவரை துறை சார்ந்த பிரிவில் என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவமும் கோரப்பட்டுள்ளது.
சட்டம், சிஏ படித்தவர்களுக்கும் காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏஏஓ (இன்சூரன்ஸ் ஸ்பெஷலிஸ்ட்) பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி அனுபவமும் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பணியிடங்கள் மற்றும் கல்வி தகுதி குறித்த விரிவான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
வயது வரம்பு:
21 வயது முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏஏஒ (ஜெனரலிஸ்ட் ) உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 88,635 சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.700 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ. 85 செலுத்தினால் போதும்.
தேர்வு எப்போது?: விண்ணப்பிக்க வரும் 08.09.2025 கடைசி நாளாகும். முதல் நிலை தேர்வு நடைபெறும் நாள் (தற்காலிகமானது)- 03.10.2025 ஆகும். மெயின் தேர்வு நடைபெறும் நாள் 08.11.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here
-
விமான நிலையங்களில் வேலை.. திருச்சியிலும் காலியிடம்! டிகிரி போதும்.. இன்றே கடைசி நாள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications