DRDO-ல் கொட்டிக் கிடக்கும் வேலை.. 10 முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களா? தட்டித் தூக்குங்கள்!
டெல்லி: மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (DRDO) பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஆர்டிஓ அமைப்பு குறித்து அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். நமது இந்திய ராணுவத்திற்கும், விண்வெளித் துறைக்கும் தேவையான விமானங்கள், ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை தயாரிப்பது டிஆர்டிஓ நிறுவனம்தான். சுருக்கமாக, இந்திய ராணுவத்தின் முதுகெலும்பு என டிஆர்டிஓ நிறுவனத்தை கூறலாம்.
இந்நிலையில், டிஆர்டிஓ நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தப் பணியிடங்களுக்கு தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு என்ன என்பது குறித்து நாம் இங்கு காணலாம்.

பணி: Junior Translation Officer
இந்தப் பணியில் சேர ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்தும் ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கும் மொழிபெயர்ப்பு திறன் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு 30-க்குள் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.35,400 - ரூ.1,12,400 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணி: Stenographer Grade-I (English)
இந்தப் பணியில் சேர ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது. ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். வயதுவரம்பு 30-க்குள் இருக்க வேண்டியது அவசியம். இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும்.

பணி: Stenographer Grade II (English)
இந்தப் பணியில் சேர விண்ணப்பிப்போர் பிளஸ் 2 தேர்ச்சி அடைந்திருந்தால் போதுமானது. வயதுவரம்பு 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருத்தல் அவசியம். இந்தப் பணியில் சேருபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணி: Administrative Assistant (English/Hindi)
இந்தப் பணியில் சேருவதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு வயதுவரம்பு 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.19,900 முதல் ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

பணி: Store Assistant 'A' (Hindi/English)
இந்தப் பணியில் சேர பிளஸ் 2 தேர்ச்சியே கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணி: Security Assistant 'A'
இந்தப் பணியில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. அதே சமயத்தில், நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயதுவரம்பு 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். மாத சம்பவம் ரூ.19,900 முதல் 63,200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதயுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி: Vehicle operator 'A'
இந்தப் பணியில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். வயதுவரம்பு 27-க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக மாதம் ரூ.19,900 - 63,200 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதி உடையவர்கள் இப்பணிக்கு முறைப்படி விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நல்ல உடற்தகுதியும் பெற்றிருத்தல் அவசியம்.

பணி: Fireman/Fire Engineer Driver
இந்தப் பணியில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. மேலும், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல உடற்தகுதியும் கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. வயதுவரம்பு 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். மேற்கண்ட தகுதி உடையவர்கள் இப்பணிக்கு முறைப்படி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை
மேற்கண்ட பணியிடங்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணிப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டண் ரூ.100 மட்டுமே. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை - - தேர்வு நடைபெறும் இடங்கள்
டிஆர்டிஓ-ஆல் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, தொழில்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணிப்பிக்க 7-12-2022 கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சென்னை, கோவை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.












Click it and Unblock the Notifications