ரூ.1.60 லட்சம் வரை சம்பளம்.. கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.. எந்த நிறுவனம் தெரியுமா? நல்ல வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்கள் முதல் என்ஜினியரிங் படித்தவர்கள் வரை அனைவருக்கும் குறைந்தபட்சமாக மாதம் ரூ.50 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.1.60 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு காத்து கொண்டு இருக்கிறது.

மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட்.

1988ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் நகருக்கு வடக்கே கடிபல்லா பகுதியில் அமைந்துள்ளது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன் விபரம் வருமாறு:

 காலியிடம் எவ்வளவு?

காலியிடம் எவ்வளவு?

மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் (Mangalore Refinery and Petrochemicals Limited or MRPL)உதவி என்ஜினியர் (Assistant Engineer) மற்றும் உதவி எக்ஸிக்கியூட்டிவ் (Assistant Executive) என 2 பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. மொத்தம் 96 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பதவி வாரியாக பார்த்தால் Assistant Executive பிரிவில் (Finance/ Internal Audit) பிரிவுக்கு 4 பேர், Secretarial, Library and Information Science பிரிவில் தலா ஒருவர், Assistant Executive UGC (Marketing) பிரிவில் 12 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். Assistant Engineer and Assistant Executive பிரிவில் Chemistryக்கு ஒருவர், Chemical பிரிவில் 28 பேர், Mechanical பிரிவில் 24 பேர், Civil பிரிவில் 2 பேர், Electrical பிரிவில் 7 பேர், Instrumentation பிரிவில் 11 பேர், Computer Science பிரிவில் 5 பேர் என மொத்தம் 96 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி-வயது வரம்பு என்ன?

கல்வி தகுதி-வயது வரம்பு என்ன?

ஒவ்வொரு பதவிக்கு வெவ்வேறு கல்வி தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, CA, ICAI, CMA, Degree, MBA, BE, B.Tech உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியும். பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களின் வயது என்பது அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், பிடபிள்யூபிடி பிரிவினருக்கு 1 வயது வரையும் வயது தளர்வுகள் உண்டு. விண்ணப்பம் செய்பவர்களின் வயது 2023 ஜனவரி 15ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

 மாத சம்பளம் எவ்வளவு?

மாத சம்பளம் எவ்வளவு?

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.50,000 கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.1.60 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விரும்புவோர் டிசம்பர் 17ம் தேதி முதல் 2023 ஜனவரி மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

தேர்வு செய்வது எப்படி?

தேர்வு செய்வது எப்படி?

பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.118 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, ,பிடபிள்யூடி பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பம் செய்பவர்கள் GATE Mark, குழுகலந்துரையாடல் (Group Discussion), நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

வேலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+