மத்திய அரசு பணி.. ஊதியம் ரூ.40,000 முதல் ரூ.1.40 லட்சம்.. பொறியியல் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு
டெல்லி: மத்திய அரசின் மின்சக்தி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள என்டிபிசி நிறுவனத்தில் என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரை கிடைக்கும்.
மத்திய அரசின் மின்சக்தி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் என்டிபிசி(NTPC) எனும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (National Thermal Power Corporation) இயங்கி வருகிறது.
பொதுத்துறை நிறுவனமாக உள்ளன இந்த என்டிபிசியில் மின்சார உற்பத்தி, மாநிலங்களுக்கான மின்பகிர்மானம் தொடர்பான பணிகளை செய்து வருகிறது. அதாவது மின் திட்ட மேலாண்மை, கட்டுமான மேலாண்மை, மின்உற்பத்தி நிலையங்களின் செயல்பாடு உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் செய்து வருகிறது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்நிலையில் தான் என்டிபிசி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் உள்ள முக்கிய விபரங்களை தொகுத்து இந்த செய்தியில் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து மத்திய அரசின் பணியை பெற முடியும். இந்த நிறுவன வேலை சார்ந்த அறிவிப்பின் முக்கிய விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
என்டிபிசி நிறுவனத்தில் என்ஜினியரிங் எக்ஸிக்கியூட்டிவ் டிரெய்னி எனும் பொறுப்பில் மொத்தம் 864 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளது. அதன்படி எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், இன்ஸ்ட்ருமென்டேஷன் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், மைனிங் என்ஜினீயரிங் ஆகிய பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி என்ன?
பிஇ, பிடெக் பிரிவில் சம்பந்தப்பட்ட துறையில் என்ஜினீயரீங் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதாவது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், கல்லூரிகளில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், இன்ஸ்ட்ருமென்டேஷன் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், மைனிங் என்ஜினீயரிங் உள்ளிட்ட துறைகளில் தொடர்புகளில் பிரிவுகளில் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும் ஆகிய பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு- சம்பளம் என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி உள்பட பிற பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வுகள் என்பது உண்டு. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரை வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.ntpc.co.in இணையதளம் சென்று career எனும் ஆப்ஷனை தேர்வு செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய நவம்பர் 11 ம் தேதி கடைசிநாளாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் கேட் 2022 மதிப்பெண் மற்றும் நேர்க்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here












Click it and Unblock the Notifications