சென்னை புழல் சிறையில் புதிய வேலைவாய்ப்பு... மிஸ் பண்ணாதீங்க
சென்னை: புழல் மத்தியச் சிறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள தொழிற் பணியிடங்களான மின் கம்பியாளர்(Wire man) பணியிடத்திற்கான விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றியிருந்தால் போதும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மின் செயல்பாடு மற்றும் பராமரிப்பில் அனுபவம் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சம்பந்தப்பட்ட மின் பராமரிப்பு பணிகளில் அனுபவம் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை தொழில்நுட்ப பள்ளி அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் வயர்மேன் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அனுபவ காலம் இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
D.G.E. & T.Diploma in Trade of Lineman and wireman or National Trade Certificate in the Trade of Wire man கல்வித் தகுதி கொண்டவர்கள் ஒரு ஆண்டு அனுபவம் கொண்டிருந்தாலே போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்கு மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.57,900 வரை அளிக்கப்படும்.
வயது வரம்பு: பொதுப் பிரிவினர் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதேபோல பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் தங்கள் விண்ணப்பங்களை வரும் ஜனவரி 18ஆம் தேதிக்குள் - "சிறைக்கண்காணிப்பாளர், மத்திய சிறை-1, (தண்டனை) புழல், சென்னை 66" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஜனவரி 18 மாலை ஐந்து மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூடுதல் விவரங்களை https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/01/2021010674.pdf இல் தெரிந்து கொள்ளலாம்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications