‛‛நோ எக்ஸாம்’’.. மாதம் ரூ.25,500 முதல் ரூ.1.12 லட்சம் வரை சம்பளம்! என்ஐஏ-வில் சூப்பர் வேலை.. ரெடியா?
சென்னை: என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வு இன்றி நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,500 முதல் ரூ.1.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பல்வேறு விசாரணை அமைப்புகள் இயங்கி வருகின்றன. அதில் ஒன்று தான் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை. தீவிரவாதம் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு உடையவர்கள் குறித்த விசாரணைகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தான் என்ஐஏ-வில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள் - வயது வரம்பு: தற்போதைய அறிவிப்பின் படி மொத்தம் 3 பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி உதவியாளர் பணிக்கு 7 பேர் , ஸ்டெனோகிராபர் பணிக்கு 24 பேர், அப்பர் டிவிஷன் கிளர்க் பணிக்கு 9 பேர் என மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பத்தாரர்கள் 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: உதவியாளர், ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். இது Deputation அடிப்படையிலான பணியாகும். இதனால் விண்ணப்பம் செய்வோர் மத்திய அரசு அல்லது மாநில அரசு பணிகளில் இருப்போர் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
மாத சம்பளம்: உதவியாளர் மற்றும் ஸ்டெனோகிராபர் பணிக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.35,400, அதிகபட்சமாக ரூ.1 1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வழங்கப்படும். அப்பர் டிவிஷன் கிளர்க் பணிக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.25,500 வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் மாதம் ரூ.81,100 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://nia.gov.in/ இணையதளம் சென்று விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு ஆப்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ங்களை SP (Adm), NIA Hqrs, CGO Complex, Lodhi Road, New Delhi - 110003 என்ற முகவரிக்கு ஏப்ரல் 2ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் Self Attested ஆவணங்களை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். இப்படி விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here












Click it and Unblock the Notifications