சூப்பர் சிங்கர் ஸ்ரீ நிஷாவுக்கு எங்கேஜ்மென்ட்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா? அவரும் பாடகர் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான பாடகர்களான ஸ்ரீ நிஷா ஜெயசீலன் மற்றும் ஷாம் விஷால் இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகியிருக்கிறது. இருவரையும் ஏற்கனவே பல நிகழ்ச்சியில் ஒன்றாக பார்த்த ரசிகர்களுக்கு இந்த வீடியோ இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே நீண்ட நாட்களாக இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு இருந்தது. இப்போது அது நிரூபணம் ஆகி இருக்கிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி தனித்தனியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இருவரும் பின்னர் ஒரே இசைக் குழுவிலும் இணைந்து பாடி இருக்கிறார்கள். அதனால் இவர்களுடைய நட்பு ரசிகர்களுக்கு புதிதல்ல. இருவரும் ஒருவருடைய பதிவுக்கு ஒருவர் கமெண்ட் போடுவது, பார்ட்னர் என்று கேப்ஷன் கொடுப்பது என சில வருடங்களாகவே செய்து கொண்டிருந்தனர். இதனாலேயே ரசிகர்களுக்கு இவர்கள் காதலிக்கிறார்களா? இல்லை நண்பர்களா? என்று குழப்பம் இருந்தது.

Srinisha

ஸ்ரீ நிஷா- ஷாம் விஷால் எங்கேஜ்மென்ட்

ஸ்ரீ நிஷா ஜெயசீலன் சிறுவயதிலேயே விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவருடைய குறலும், பாடல்களை பாடும் விதமும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. போட்டியின் அரை இறுதி வரை சென்ற அவர் பிறகு எலிமினேஷன் செய்யப்பட்டார். அதற்குப் பிறகு இசை துறையில் தனது பயணத்தை தொடர்ந்து வந்தார். பிறகு திரைப்பட பாடகியாகவும் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.

Srinisha

பின்னணி பாடகி

இளையராஜா இசை அமைத்த அம்மா கணக்கு படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதுபோல இமைக்கா நொடிகள் படத்தில் "விளம்பர இடைவெளி" உள்ளிட்ட பாடல்களை பாடியிருந்தார். அதுபோல கண்ணா வீசி, அடி பெண்ணே போன்ற பாடல்கள் இவர் பாடியதுதான். அதுவும் இவரை இளைஞர்களுக்கு மத்தியில் ரொம்பவும் பரிச்சயம் ஆக்கியது.

சூப்பர் சிங்கர் குழு

அதுபோல ஷாம் விஷாலும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அதிகமான ரசிகர்களை பெற்றார். சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அந்த சீசனில் மூன்றாவது இடத்தை பிடித்தார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகும் பல பாடல்கள் பாடி இருக்கிறார். சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அதுபோல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு ஸ்ரீ நிஷா, சாம் விஷால், டிஜே பிளாக் இணைந்து பேச்சிலர்ஸ் பேண்ட் என்ற குழுவையும் நடத்தி வருகிறார்கள்.

Srinisha

அடுத்தடுத்த பங்க்ஷன்

சமீபத்தில் கூட இருவரும் இணைந்து அன்னக்கொடியே என்ற பாடலையும் பாடி இருந்தார்கள். இந்த நிலையில் தற்போது இருவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதுவும் நேற்று நவம்பர் 11ஆம் தேதி நடந்ததாக தெரிகிறது. ஏற்கனவே நேற்று அனிருத் காவ்யா மாறன் திருமணம் செய்திருந்தார். அதுபோல சின்னத்திரைகளிலிருந்து வெள்ளி துறையில் நாயகியாக மாறிய நடிகை பிரியா பவானி சங்கர் அவருடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார். பிக் பாஸ் பிரபலமான தனலட்சுமிக்கு எங்கேஜ்மென்ட் நடந்திருக்கிறது. அந்த வரிசையில் ஷாம் விஷால் மற்றும் ஸ்ரீ நிஷா ஜோடிக்கும் எங்கேஜ்மென்ட் நடந்திருக்கிறது. இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+