ரெடியா? மாதஊதியம் ரூ.50,000 டூ ரூ.2.80 லட்சம்.. நெய்வேலி என்எல்சியில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி என்எல்சியில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.2.80 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறையின் கட்டுப்பாட்டின் ‛நவ்ரத்னா' நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் கீழ் தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: என்எல்சியில் எக்சிக்யூட்டிவ் என்ஜினீயர் பணிக்கு 234, துணை பொது மேலாளர் பணிக்கு 30, உதவி எக்சிக்யூட்டிவ் என்ஜினீயர் பணிக்கு 6 பேர், மேலாளர் பணிக்கு 13 பேர், பொது லோலளர் பணிக்கு 11 பேர், கூடுதல் தலைமை மேலாளர் பணிக்கு 3 பேர், துணை பொது மேலாளர் பணிக்கு 8 பேர் என மொத்தம் 308 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், கெமிக்கல் உள்பட ஏதேனும் ஒரு பிரிவில் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் எம்பிஏ, எம்எஸ்சி கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி சார்ந்த உட்பிரிவு படிப்புகளையும் படித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிஏ, ஐசிடபிள்யூஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
வயது வரம்பு: பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 30 வயதில் இருந்து அதிகபட்சமாக 54 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். இதில் வயது வரம்பு என்பது 54 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பணிக்கு மட்டும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 3 வயது வரை தளர்வு உண்டு. விண்ணப்பம் செய்வோரின் வயது என்பது 2023 ஜூன் மாதம் 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
மாத சம்பளம் என்ன: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.2.80 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.nlcindia.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஜூலை மாதம் 5ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
எழுத்து தேர்வு இல்லை: இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதன்மூலம் எழுத்து தேர்வு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் பணிக்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.854 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி, ஓய்வு படை வீரர்களுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.354 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications