தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு.. 8-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்!
சென்னை: தமிழ்நாடு மீன்வளத் துறையில் 5 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர்(Office Assistant) பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 18 - 30 ஆகும். விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2021 ஆகும்.

தகுதியும், திறமையும் உள்ளவர்கள் The Commissioner of Fisheries and Fishermen Welfare, Integrated Animal Husbandry, Diarying & Fisheries Office Complex, Nandanam, Chennai-600035 என்ற முகவரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்டுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15,700 முதல் ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications