8ம் வகுப்பு, டிகிரி-டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை.. திருச்சியிலேயே பணி.. அழைக்கும் சுகாதாரத்துறை

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாவட்ட பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 8 ம் வகுப்பு முதல் டிப்ளமோ, டிகிரி, பிடிஎஸ் படித்தவர்கள் வரை விண்ணப்பம் செய்து மாதம் ரூ.8,500 முதல் ரூ.34,000 வரை சம்பளம் பெற முடியும்.

தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் பொது சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி தற்போது திருச்சி பொது சுகாதாரத்துறையில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

திருச்சி பொது சுகாதாரத்துறை சார்பில் மொத்தம் 54 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி நர்ஸ் 35, ஹெல்த் இன்ஸ்பெக்டர் 2, ஹாஸ்பிட்டல் வொர்க்கர் 2, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் 3, டென்டல் சர்ஜன், ஏஎன்எம்/யூஎச்என், லேப் டெக்னிஷியன், ஆடியோமெட்ரிசியன், ஸ்பீச் தெரபிஸ்ட், ஆடியோலாஜிஸ்ட், ரோடியோகிராபர், சானிட்டரி வொர்க்கர், சானிட்டரி அட்டென்டர், செக்யூரிட்டி கார்ட், ஆபிஸ் அசிஸ்டென்ட், மல்டி பர்பஸ் ஹாஸ்பிட்டல் வொர்க்கர் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 54 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

இந்த பணிகளுக்கு தனித்தனி கல்வி தகுதிகள் உள்ளன. அதன்படி டென்டல் சர்ஜன் பணிக்க பிடிஎஸ், நர்ஸ் பணிக்கு டிப்ளமோ, பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும். ஆடியோமெட்ரிசியன், ஏஎன்எம்/யூஎச்என், ஸ்பீச் தெரபிஸ்ட், ஆடியோலாஜிஸ்ட் பணிக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஆபிஸ் அசிஸ்டென்ட், ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிக்கு 10, அல்லது 12ம் வகுப்பும், சானிட்டரி வொர்க்கர், சானிட்டரி அட்டென்டர், செக்யூரிட்டி கார்டு ஆபிஸ் அசிஸ்டென்ட், மல்டி பர்பஸ் ஹாஸ்பிட்டல் வொர்க்கர் பணிக்கு 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

 மாத சம்பளம் என்ன?

மாத சம்பளம் என்ன?

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.8,500 முதல் ரூ.34,000 வரை மாதசம்பளம் வழங்கப்படும். பணி வாரியாக பார்த்தால் டென்டல் சர்ஜன் பணிக்கு ரூ.34 ஆயிரம், நர்ஸ் பணிக்கு ரூ.18 ஆயிரம், ஆடியோலாஜிஸ்ட் பணிக்கு ரூ.23 ஆயிரம், ஆடியோமெட்ரிசியன் பணிக்கு ரூ.17,250, ஸ்பீச் தெரபிஸ்ட் பணிக்கு ரூ.17 ஆயிரம், ஹெல்த் இன்ஸ்பெக்டர், என்எம்/யூஎச்என் பணிக்கு ரூ.14 ஆயிரம், ரேடியோகிராபர் பணிக்கு ரூ.13,300, லேப் டெக்னிஷியன் பணிக்கு ரூ.13,000, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ரூ.13,500, ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு ரூ.10 ஆயிரம், மல்டி பர்பஸ் ஹாஸ்பிட்டல் வொர்க்கர், சானிட்டரி வொர்க்கர், சானிட்டரி அட்டென்டர், செக்யூரிட்டி கார்டு பணிக்கு ரூ.8,500 வழங்கப்படும்.

 வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

விண்ணப்பம் செய்பவர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பானது 01.01.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. விண்ணப்பம் செய்பவர்கள் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி ஒப்பந்த அடிப்படையிலானது.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து கூடுதல் விபரங்களை அறிந்து நேரில் சென்று விண்ணப்ப படிவம் வாங்கி பூர்த்தி செய்து நேரில் வழங்கலாம். இல்லாவிட்டால் விண்ணப்ப படிவம் வாங்கி வந்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஸ்பீட் போஸ்ட் முறையில் டிசம்பர் 26ம் தேதி மாலை 6 மணிக்குள் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில், T.V.S டோல்கேட், திருச்சிராப்பள்ளி - 620020 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு தொலைபேசி எண் 0431-2333112, மின்னஞ்சல் முகவரி [email protected]

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+