பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை.. 750 பணியிடங்கள்.. மாதம் 86,000 சம்பளம்! டிகிரி + தமிழ் மொழி அவசியம்
சென்னை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. டிகிரி முடித்தவர்கள் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை குறைந்தது மாதம் ரூ.48 ஆயிரம் முதல் 86 ஆயிரம் வரை வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்னும் 3 நாட்களே உள்ளன.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கி. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் வங்கி கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை
பொதுத்துறை வங்கி என்பதால் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவைகள் கிடைக்கின்றன. இதனால் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்பது தேர்வர்களின் கனவுகளில் ஒன்றாக உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள காலிப்பணியிடங்கள் ஐபிபிஎஸ் வழியாக மட்டுமின்றி நேரடியாக வங்கியே அறிவிப்பு வெளியிட்டு பணியிடங்களை நிரப்பி வருகிறது.
அந்த வகையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள லோக்கல் பேங்க் ஆபிசர் எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* லோக்கல் பேங்க் ஆபிசர்: 750
மாநில வாரியாக பணியிடங்கள்:
தமிழ்நாடு - 85
ஆந்திரப் பிரதேசம் - 05
குஜராத் - 95
கர்நாடகா - 85
மகாராஷ்டிரா - 135
தெலங்கானா - 88
மேற்குவங்கம் - 90
ஜம்மு & காஷ்மீர் - 20
லடாக் - 03
அருணாசலப் பிரதேசம் - 05
அஸாம் - 86
மணிப்பூர் - 08
மேகாலயா - 08
மிசோரம் - 05
நாகாலாந்து - 05
சிக்கிம் - 05
திரிபுரா - 22 என மொத்தம்: 750 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அது போக ரிசர்வ் வங்கி (RBI) சட்டம், 1934 இன் இரண்டாம் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள வணிக வங்கி அல்லது பிராந்திய கிராமப்புற வங்கியில் கிளார்க் /அலுவலர் பிரிவில் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள 85 பணியிடங்களுக்கும் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியானவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) பதவிக்கு மாதம் ரூ.48,480/- முதல் ரூ.85,920/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
தேர்வு முறையானது ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித் திறன் தேர்வு (LLPT) மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நாகர்கோவில் /கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய நகரங்களில் அமைக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
ST/SC/முன்னாள் ராணுவத்தினர்/PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.590/-. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.1180/-. கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://pnb.bank.in/) ஆன்லைன் படிவத்தை நிரப்ப வேண்டும். விண்ணப்பிக்க வரும் 23 ஆம் தேதி கடைசி நாளாகும். இன்னும் 3 நாட்களே இருப்பதால் உடனே விண்ணப்பித்து கொள்ளவும்.
தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2025 அல்லது ஜனவரி 2026. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு அறிவிப்பை படிக்க: Click Here
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications