மாதம் ரூ.63,200 சம்பளம்.. 8 ம் வகுப்பு முடித்தாலே போதும் தபால் துறையில் வேலை.. சென்னையிலேயே பணி!
சென்னை: இந்திய தபால் துறை சார்பில் மாத சம்பளமாக அதிகபட்சம் ரூ.63,200 கிடைக்கும் வகையில் சென்னையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 8 ம் வகுப்பு முடித்திருந்தாலே போதும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால்(அஞ்சல்) துறை இயங்கி வருகிறது. இந்திய தபால்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் பற்றிய விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
தபால்துறையில் Skilled Artisans எனும் பிரிவில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த பிரிவில் M.V Mechanic- 4, M.V Electrician, Upholster (Skilled), Cooper and Tinsmith (Skilled) ஆகியவற்றுக்கு தலா ஒருவர் என மொத்தம் 7 காலி இடங்கள் காலியாக உள்ளன. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் பணியமர்த்தப்படுவார்கள்.

கல்வி தகுதி என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 8 ம் வகுப்பு படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட பிரிவில் படிப்பை முடித்து சான்று பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சமாக 18 வயதும், அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும் தளர்வு உண்டு.

மாத சம்பளம் எவ்வளவு?
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.19 ஆயிரத்து 900 முதல் ரூ.63 ஆயிரத்து 200 வரை கிடைக்கும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு கட்டணாக ரூ.400 நிர்வணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 2023 ஜனவரி மாதம் 9 ம் தேதிக்குள் ஆப்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்படி விண்ணப்பத்தாரர்கள் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து The Senior Manager (JAG), Mail Motor Service, No-37, Greams Road, Chennai - 600006 என்ற முகவரிக்கு 2023 ஜனவரி 9 ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications