Bank Job: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை.. தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை! சூப்பர் சான்ஸ்.. விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5,138 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தமிழ் தெரிந்தவர்கள் முன்னுரிமை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்களை இங்கு காணலாம்.

நாட்டில் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கி. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. சுமார் 10 ஆயிரம் வங்கி கிளைகளுடன் இந்த வங்கியில் பல ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

Bank job


பயிற்சி பணியிடங்கள்

பொதுத்துறை வங்கி என்பதால் இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு விதிகளின்படி கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவைகள் கிடைக்கும். பஞ்சாப் நேஷனல் வங்கியில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன.

படித்து முடித்த பிரஷர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது ஒப்பந்த அடிப்படையிலான இந்த பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

அப்ரெண்டீஸ் (பயிற்சி பணியிடங்கள்) - மொத்தம் 5,138 காலியிடங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னை -56, கோவை, 28, திருச்சி 37 என 121 பணியிடங்கள் உள்ளன. கர்நாடகாவில் 64, கேரளாவில் 83, புதுவை 02 - பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். 01.1.2026 தேதியில் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்தவர்களும், 28 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, விண்ணப்பதாரர்கள் 02.01.1998 க்கு முன்போ, 01.1.2006 க்கு பிறகோ பிறந்தவராக இருத்தல் கூடாது.

அரசு விதிகளின் படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் சலுகைகள் அளிக்கப்படும். அதாவது எஸ்சி எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் என்றால் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் எவ்வளவு?

ஊரக பகுதி / சிறு நகரங்களில் உள்ள கிளைகளில் சேருபவர்களுக்கு ரூ.12,300 மாத ஊதியமாக அளிக்கப்படும். சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள கிளைகள் என்றால் மாதம் ரூ.15 ஆயிரம் அளிக்கப்படும்.

தேர்வு முறை:

தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.944 செலுத்த வேண்டும். பெண்களுக்கு கட்டணம் ரூ.708 ஆகும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.236 கட்டணம் ஆகும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

விருப்பம் உள்ள தேர்வர்கள் https://pnb.bank.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 08.02.2026 ஆகும். விண்ணப்பிக்க கால அவகாசம் முடியும் நாள்: 24.02.2026 ஆகும். தேர்வு நடைபெறும் நாள் - மார்ச் 2026 முதல் வாரம்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://pnb.bank.in/recruitments.aspx

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+