Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RRB Group D: இந்தியன் ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! தூள் கிளப்புங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியன் ரயில்வே ஆர்ஆர்பி குரூப் டி (RRB Group D) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மொத்தம் 22 ஆயிரத்து 195 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 10, ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப சம்பளமாக மாதம் ரூ.18,800 சம்பளம் வழங்கப்படும்.

நாட்டின் மிகப்பெரிய அரசு நிறுவனமான இந்தியன் ரயில்வேயில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். கை நிறைய சம்பளம், குடியிருப்பு, பயண வசதி சலுகைகள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதால் ரயில்வேயில் வேலைக்கு சேர இளைஞர்கள் போட்டா போட்டி போடுகிறார்கள்.

RRB Group D Recruitment 2026 Registration Delayed for 22 000 Vacancies New Dates Announced

22,195 பணியிடங்கள்

ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக ரயில்வேயில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் தேர்வர்கள் பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் குரூப் டி பணியிட அறிவிப்பானது எப்போது வெளியாகும் என எதிர்ப்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் தான் மொத்தம் 22 ஆயிரத்து 195 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் குரூப் 4 தேர்வு போல, குரூப் டி தேர்வுக்கும் லட்டக்கணக்கானோர் நாடு முழுவது விண்ணப்பிப்பார்கள். எப்போது விண்ணப்பபதிவு தொடங்கும் என தேர்வர்கள் காத்திருந்த நிலையில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என ஆர்.ஆர்பி அறிவித்துள்ளது.

மொத்த பணியிடங்கள் விவரம்:

லெவல் 1 (Group D) - 22,195
* உதவியாளர் (Track Machine): 600
* உதவியாளர் (Bridge): 600
* தண்டவாள பராமரிப்பாளர் (Group IV): 11000
* உதவியாளர் (P-way): 300
* உதவியாளர் (TRD): 800
* உதவியாளர் Loco Shed (Electrical): 200
* உதவியாளர் Operations (Electrical): 500
* உதவியாளர் (TL & AC): 50
* உதவியாளர் (C & W): 1000
* உதவியாளர் B: 5000
* உதவியாளர் (S & T): 1500
என மொத்தம் 22,195 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி:

* கல்வித் தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

* வயது வரம்பானது 01.01.2026 அன்று தேதிப்படி கணக்கீடு செய்யப்படும். 18 வயது நிரம்பியவர்களும் 33 வயதுக்கு உட்பட்டவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளானது அளிக்கப்படும்.

* எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி / எஸ்டி பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. ஓபிசி பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?

சம்பளத்தை பொறுத்தவரை ஆரம்பமாகவே ரூ.18,800 வழங்கப்படும். மத்திய அரசின் ஊதிய கமிஷன் 7-வது படி சம்பளம் கிடைக்கும். விரைவில் 8-வது ஊதிய கமிஷன் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த சம்பளம் கணிசமாக உயரவும் வாய்ப்பு இருக்கிறது.

தேர்வு முறை:

* தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியிலான தேர்வு முதலில் நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, உடல் திறன் தேர்வு (PET), சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

* ஆர்.ஆர்.பி குரூப் டி தேர்வுக்கு ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொதுப்பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ.250 கட்டணம் ஆகும்.

* தேர்வு எழுதிய பிறகு ரூ.500 கட்டணம் செலுத்தியவர்களுக்கு ரூ.400 திருப்பி தரப்படும். ரூ.250 கட்டணம் செலுத்தியவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி தரப்படும்.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

* ஆர்.ஆர்.பி குரூப் டி பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள் 02.03.2026 ஆகும்.

தேர்வு அறிவிப்பை படிக்க:

https://rrbajmer.gov.in/Upload_PDF/Final-Detailed%20CEN%2009-2025%20Level-1-updated%20on%2030012026-639054049190206941.pdf

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+