ரயில்வே வேலை.. இன்ஜினியரிங் படிச்சவங்களுக்கு யோகம்.. 3 நாள்தான் இருக்கு! உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் தான் கடைசி நாள் ஆகும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், இதற்கான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக இந்திய ரயில்வே உள்ளது. பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்திய ரயில்வேயில் பணியாற்றி வருகிறார்கள். கை நிறைய சம்பளம், சலுகைகள், பணி பாதுகாப்பு போன்றவை இருப்பதால் ரயில்வே வேலையில் சேர வேண்டும் என்பது வேலை தேடும் இளைஞர்களின் பெரும் கனவாக உள்ளது.

ரயில்வே பணிக்காக ரயில்வே தேர்வு வாரியம் உரிய அறிவிப்பு வெளியிட்டு அவ்வப்போது தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்கிறது. அந்த வகையில் தற்போது ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன? என்பது உள்பட இதர விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* கெமிக்கல் சூப்பர்வைசர் / ஆராய்ச்சி மற்றும் உலோகவியல் மேற்பார்வையாளர் / ஆராய்ச்சி - 13 பணியிடங்கள்.
* ஜூனியர் இன்ஜினியர், டிப்போ மெட்டீரியல் சூப்பிரண்டு மற்றும் கெமிக்கல் & மெட்டலர்ஜிக்கல் உதவியாளர் - 7934 பணியிடங்கள் என மொத்தம் 7,951 பணியிடங்கள் நிரப்படுகின்றன.
சென்னை புழல் சிறையில் வேலை.. மாதம் 72,000 சம்பளம்.. 8 ஆம் வகுப்பு முடித்திருந்தாலே விண்ணப்பிக்கலாம்
கல்வி தகுதி: ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு டிப்ளமோ/ டிகிரி முடித்தவர்கள் விண்னப்பிக்கலாம். ஜூனியர் இன்ஜினியர் (ஐடி: பிஜிடிசிஏ/பி.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) , பிசிஏ/ பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டெப்போ மெட்டிரியல் கண்காணிப்பாளர் பணிக்கு டிப்ளமோ/ இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.
கெமிக்கல் & மெட்டலர்ஜிக்கல் பணியிடத்திற்கு இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் கொண்ட பட்டப்படிப்பை 45 மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் படித்துக்கொள்ளலாம்.
வயது வரம்பு & சம்பளம்: இந்த பணியிடங்களுக்கு 18 - வயது முதல் 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் சலுகை உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை ஆரம்ப ஊதியமாக ரூ.35,400/- வழங்கப்படும். இதர சலுகைகளும் உண்டு. விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்க கடைசி நாள்; 29.08.2024 ஆகும். இன்று 3 நாட்களே எஞ்சியிருப்பதால் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கவும். கடைசி நாள் வரை காத்திராமல் இன்றே விண்ணப்பித்து விடுங்கள்..
கட்டணம் எவ்வளவு?: தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். ஆன்லைன் தேர்வு எழுதிய பின்னர் ரூ. 400 திருப்பி அளிக்கப்படும். பெண்கள் மற்றும் எஸ்சி / எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 250 விண்னப்பக் கட்டணம் ஆகும். ஆன்லைன் தேர்வு எழுதி முடித்ததும் இவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பி தரப்படும்.
தேர்வு விவரம்: கணிணி வழியிலான (சிபிடி) தேர்வு நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மெடிக்கல் தேர்வு நடைபெறும். மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு (https://www.rrbchennai.gov.in/) இந்த லிங்கை கிளிக் செய்யவும். தேர்வு அறிவிப்பை படிக்க இந்த லிங்கை https://www.rrbchennai.gov.in/downloads/CEN_03_2024_JE_English.pdf கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications