For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொறியியல் விதிகளில் திருத்தம்.. எதிர்காலம் கேள்வி குறி?டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்தவர்கள் கவலை

Google Oneindia Tamil News

சென்னை: ஊரக வளர்ச்சி துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர் பணி இடங்களுக்கு பி.இ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று பொறியியல் விதிகளில் திருத்தம் செய்து ஊரக வளர்ச்சி துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்தவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி வேளாண் துறை, மீன்வளத்துறை உட்பட பல துறைகளில் உதவி பொறியாளர்கள் நியமனம் செய்ய பி.இ தகுதியாகவும், இளநிலை பொறியாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் போன்ற பணியிடங்களுக்கு டிப்ளமோ தகுதியாகவும் நிர்ணயிக்கப்பட்டது

அதன் அடிப்படையில் தான் இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தது. இந்தநிலையில் ஊரக வளர்ச்சித் துறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் அடிப்படையில் நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் பலர் தங்களுக்கு நல்ல வாய்ப்பு வந்திருப்பதாக நம்பி கொண்டிருந்தனர்.

இளநிலை வரை தொழில் அலுவலர்

இளநிலை வரை தொழில் அலுவலர்

இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறையில் பொறியியல் சார்நிலை பணி விதிகளில் திருத்தம் செய்திருப்பதாக ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றிக்கை அனுப்பி உள்ளார். அவர் கடிதத்தில், அந்த கடிதத்தில் தங்கள் மாவட்டத்தில் இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப புதிய அறிவிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்கக்கேட்டுக் கொள்கிறேன்.

முன்னுரிமை யாருக்கு

முன்னுரிமை யாருக்கு

இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடத்தில் நியமனம் செய்யப்படுபவர் ஜூலை 1ம் தேதியில் 35 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முழுநேரம் மற்றும் பகுதிநேரம் படித்தவராக இருத்தல் வேண்டும். எந்த ஒரு பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனத்திலிருந்தும் கட்டுமான பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்தக் கல்வித் தகுதியின் அடிப்படையில் வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நியமிக்க வேண்டும் டிசம்பர் 9ம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 அரசு வேலை

அரசு வேலை

இதுகுறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டயப் பொறியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து பிரபல தமிழ் தினசரி செய்திதாள் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தமிழகம் முழுவதும் 548 பாலிடெக்னிக் கல்லூரிகள் இருக்கிறது. இந்த கல்லூரிகளிலிருந்து ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். இந்த மாணவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தான் இளநிலை பொறியாளர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கு பொறியியல் விதிகளில் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்தால் போதும் என்ற நிலை இருந்து வந்தது. இதன்மூலம் டிப்ளமோ படித்த மாணவர்கள் பலர் வேலைவாய்ப்பு பெற்றார்கள்.

முதல்வர் தலையிட கோரிக்கை

முதல்வர் தலையிட கோரிக்கை

ஆனால் தற்போது பி.இ படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டிப்ளமோ படித்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. பொறியியல் விதிகளில் திருத்தம் செய்தது அரசின் விதிகளுக்கு முரணானது. குறிப்பாக, டி.என்.பி.எஸ்.சி சட்ட விதிகளுக்கு இது விரோதமானது. இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

English summary
The Rural Development Department has taken steps to amend the engineering rules so that those who have completed BE can also apply for Rural Development Officer Thus Diploma in Civil Engineering graduates are concerned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X