எஸ்பிஐ வங்கியில் வேலை.. சிறப்பு அதிகாரி பணி! ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம்.. யார் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.85 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்.பி.ஐ உள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வரும் எஸ்.பி.ஐ வங்கியில் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். கவுரவமான வேலை, கை நிறைய சம்பளம், சலுகைகள் ஆகியவை கிடைக்கும் பணி என்பதால் வங்கியில் பணியாற்ற வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாக உள்ளது.

இதனால் எஸ்.பி.ஐ வங்கி வெளியிடும் ஆட்சேர்ப்பு அறிவிப்பு இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது எஸ்.பி.ஐ வங்கி சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு என்னென்ன தகுதிகள், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
மேனேஜர் (டேடா சயின்டிஸ்ட்) - 13
துணை மேலாளர் (டேடா சயிண்டிஸ்ட்) - 29 என மொத்தம் 42 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. '
கல்வித் தகுதி: பி.இ/ பி.டெக், எம்.சி.ஏ, எம்.ஏ, எம்.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டேடா சயின்ஸ் துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். ஏ.ஐ / எம்.எல் மாடல் டெவலப்மண்ட் பிரிவிலும் அனுபவம் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: மேனேஜர் டேடா சயின்டிஸ்ட் பணிக்கு 26 வயது முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். துணை மேலாளர் (டேடா சயிண்டிஸ்ட்) பணிக்கு 24-வயது முதல் 32 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை மேனேஜர் (டேடா சயிண்டிஸ்ட்) பணிக்கு ரூ.85,920- 1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும். துணை மேலாளர் (டேடா சயிண்டிஸ்ட்) கிரேடு ஸ்கேல் 2 பணிக்கு ரூ.64,820- 93,960 வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இண்டர்வியூக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிப்பிவினை படித்துவிட்டு, தேவையான கல்வி தகுதியும் அனுபவமும் இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்,.டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 24.02.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:












Click it and Unblock the Notifications