எஸ்பிஐ வங்கியில் 6,589 கிளார்க் பணியிடங்கள்.. வந்தது மெகா அறிவிப்பு.. தமிழ் தெரிஞ்சவங்களுக்கு செம சான்ஸ்
சென்னை: தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த மெகா அறிவிப்பினை எஸ்பிஐ வங்கி (sbi bank) வெளியிட்டுள்ள்து. மொத்தம் 6,589 கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 64,480 வரை வழங்கப்படும். வயது வரம்பு என்ன, எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.
வங்கிகளில் வேலை பார்க்க வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான தேர்வர்களில் பெரும் கனவுகளில் ஒன்றாக உள்ளது. கை நிறைய சம்பளம், சலுகைகள், சமூகத்தில் கவுரமான அந்தஸ்து, பணி பாதுகாப்பு உள்ளிட்டவை இருப்பதால் வங்கிப் பணிகளில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்று வருட கணக்கில் தேர்வர்கள் தயாராகி வருகிறார்கள்.

மெகா அறிவிப்பை வெளியிட்ட எஸ்பிஐ
பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. இதில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தவிர்த்து இதர அனைத்து வங்கிகளுக்குமான பணியிடங்கள் நிரப்பபடும். ஸ்டேட் பேங்க ஆப் இந்தியாவை பொறுத்தவரை தனியாக தேர்வு நடத்தி ஆட்சேர்ப்பு பணியை நடத்துகிறது.
ஸ்டேட் வங்கியில் நடத்தப்படும் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பை தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இன்று ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது எஸ்.பி.ஐ வங்கி. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
மொத்தம் 6,589 கிளார்க் (ஜூனியர் அசோசியேட்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தமிழகத்தில் மட்டும் 380 பணியிடங்கள் நிரப்ப படுகின்றன. கர்நாடகாவில் 270 பணியிடங்களும், கேரளாவில் 247 பணியிடங்களும் என மொத்தம் 5,180 பணியிடங்கள் நிரப்ப படுகின்றன. ஏற்கனவே நிரப்பப்படாத backlog பணியிடங்களையும் சேர்த்து 6,589 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி
கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருந்தால் போதும். டிசம்பர் 31. 2025 -க்குள் டிகிரி முடிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்து இருப்பது அவசியம். 10,12 ஆம் வகுப்பில் உள்ளூர் மொழியை ஒரு பாடமாக எடுத்து படிக்காத விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழித்திறன் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.
வயது வரம்பு:
20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, ஏப்ரல் 2, 1997 முதல் ஏப்ரல் 1, 2005 க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினர் என்றால் 31 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு கட்ட தேர்வுகள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் நிலை தேர்வு செப்டம்பர் மாதத்திலும் மெயின்ஸ் தேர்வு நவம்பர் மாதத்திலும் நடைபெறும். இது குறித்த விவரங்கள் தேர்வர்களுக்கு பிறகு தெரியப்படுத்தபடும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ. 24,050 - 64,480 வரை வழங்கப்படும். ஆன்லைன் முறையில் மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://sbi.co.in/documents/77530/52947104/JA+2025+-Detailed+Advt.pdf/8f7ff18f-1972-21c8-9212-5a8cf85a7099?t=1754398573326
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications