படிச்சிட்டு வேலை இல்லையா?.. கவலையை விடுங்க.. கெத்தான பேங்க் வேலை ரெடியா இருக்கு.. அப்ளை செய்யுங்க
சென்னை: எஸ்பிஐ வங்கியில் புரபேஷனரி ஆபிஸர்கள் பணிக்கான 2000 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 4 ஆகும்.
பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரி பணிக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. இந்த தேர்வு இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. மொத்தம் 2000 காலிப்பணியிடங்கள் உள்ளன.

மாத சம்பளமாக ரூ 27,620 வழங்கப்படும். இந்த பணிக்கான தேர்வை எழுத டிசம்பர் 4ஆம் தேதி கடைசி நாள். இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
sbi.co.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி, பட்டப்படிப்பு முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிக்கையை பாருங்கள்.
விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய முழு விவரங்களை தெரிந்துக் கொள்ள அறிவிக்கையை பாருங்கள். இந்த பணிக்கு பிரதான தேர்வு, முதல் நிலைத் தேர்வு, சரியான விடைக்கான தேர்வு, விவரித்தல் தேர்வு ஆகியவை மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பொதுப் பிரிவு, ஓபிசி, ஈடபிள்யூஎஸ் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ 750 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பக் கட்டணம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
டிசம்பர் 3ஆம் வாரத்தில் முதல்நிலை தேர்வுக்கான அழைப்பு கடிதங்கள் கிடைக்கும். ஆன்லைன் மூலம் முதல்நிலைக்கான தேர்வு டிசம்பர் 31, அடுத்த ஆண்டு ஜனவரி 2, 4, 5, ஆகிய தேதிகளில் நடைபெறும். அது போல் பிரதான தேர்வு ஜனவரி 29ஆம் தேதியும் நேர்காணல் பிப்ரவரி அல்லது மார்ச் மாதமும் நடைபெறும்.












Click it and Unblock the Notifications