செபி-நிறுவனத்தில் வேலை.. 44 ஆயிரம் சம்பளம்.. தமிழகத்திலேயே எக்ஸாம் எழுதலாம்.. அப்ளை பண்ண ரெடியா?
சென்னை: மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் செபி- நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.
இந்திய பங்குச்சந்தைகள் கட்டுப்பாடு அமைப்பு எனப்படும் (செபி) நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 97 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசிஸ்ட்ண்ட் மேனேஜர் பதவிகளில் சட்டம், தகவல் தொழில்நுட்பம், ஆய்வு, அதிகார்ப்பூர்வ மொழி, இன்ஜினியரிங், பொது ஆகிய துறைகளில் இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
பொது - 62 பணியிடங்கள்
சட்டம் (Officer Grade A (AM) - 5
தகவல் தொழில் நுட்பம் - 24
ஆய்வு - 2
அதிகாரப்பூர்வ மொழி - 2
இன்ஜினியரிங்- 2
கல்வி தகுதி: பொது பணியிடங்களுக்கு சட்டம், பொறியியல் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஏதாவது ஒரு துறையில் மாஸ்டர் டிகிரி முடித்து இருக்க அல்லது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும் Officer Grade A (AM) – Legal – பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
ஆய்வு பணியிடங்களுக்கு பொருளாதாரம், வணிகம், வணிக நிர்வாகவியல், நிதி பொருளாதாரம் உள்ளிட்ட துறையில் முதுகலை, முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ மொழி- பணியிடத்திற்கு ஹிந்தி மற்றும் ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்வதில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொது பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். அரசு விதிகளின் படி இதர பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகள் உண்டு. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எஸ்பிஐ வங்கியில் வேலை.. எக்ஸாம் கிடையாது.. 150 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வு நகரங்கள்: நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எழுத்து தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, விருதுநகர், சேலம், நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, நாகர்கோவில், கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய நகரங்களில் நடைபெறும். அடுத்த கட்ட தேர்வு தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 30.06.2024 கடைசி நாள் ஆகும். தேர்வு அறிவிப்பினை படிக்கவும் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் இந்த https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=343 என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications