Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெடியா? ரூ.95,910 வரை சம்பளம்.. டிகிரி, ஐடிஐ முடித்தாலே போதும்.. கரன்சி நோட் பிரஸில் அசத்தலான வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாசிக்கில் உள்ள இந்திய ரூபாய் நோட்டு தயாரிப்பு பிரஸில் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.95,910 வரையிலான சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய உற்பத்தி கழகம் இயங்கி வருகிறது. இந்த கழகத்தின் கட்டுப்பாட்டில் தான் இந்தியாவில் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், பாஸ்போர்ட் உள்பட முக்கிய ஆவணங்கள் தயாரிக்கப்படுவதோடு, அதற்கான காகிதங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

 Security Printing and Minting Corporation of India Limited recruitment for Supervisor and Junior Technician

இந்த கழகத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமைந்துள்ளது. இதுதவிர மகாராஷ்டிரா மாநிலம் நாசிக், திவாஸ், மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் ரூபாய் மற்றும் நாணய தயாரிப்பு, பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவண தயாரிப்புக்கான நிறுவனங்கள் உள்ளன. மேலும் ஹைதராாத் அருகே உள்ள நர்மதாபுரத்தில் காகித உற்பத்தி ஆலை உள்ளது.

இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பிரஷில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிங்கடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி மொத்தம் 177 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:

சூப்பர்வைசர்: இங்கு சூப்பர்வைசர் (டெக்னிக்கல் ஆபரேஷன் - பிரிண்டிங்) பணிக்கு 2 பேர், சூப்பர்வைசர் (ஆபிசியல் லேங்குவேஜ்) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்டிஸ்ட் (கிராபிக் டிசைன்) பணிக்கு ஒருவரும், செக்ரட்டரியல் அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஜூனியர் டெக்னீசியன்: இந்த பணிக்கு மொத்தம் 6 பிரிவுகளில் மொத்தம் 112 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி ஜூனியர் டெக்னீசியன் (வொர்க் ஷாப் -எலக்ட்ரிக்கல் ) பணிக்கு 6 பேர், வொர்க் ஷாப் - மெஷினிஸ்ட் பணிக்கு 2 பேர், வொ்க் ஷாப் - பிட்டர் பணிக்கு, வொர்க் ஷாப் - எலக்ட்ரானிக்ஸ் பேர், வொர்க் ஷாப் ஏர் கண்டிஷனிங் பணிக்கு தலா 4 பேர், பிரிண்டிங்/கண்ட்ரோல் பணிக்கு 92 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி: சூப்பர்வைசர் (டெக்னிக்கல் ஆபரேஷன்) பணிக்கு டிப்ளமோ பிரிவில் பிரிண்டிங் அல்லது பிஇ, பிடெக், பிஎஸ்சி பிரிவில் பிரிண்டிங் என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும். சூப்பர்வைசர் (ஆபிசியல் லேங்குவேஜ்) பணிக்கு இந்தி, ஆங்கில பிரிவில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும். அதோடு இந்தியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிப்பெயர்ப்பதில் ஓராண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஆர்டிஸ்ட் (கிராபிக் டிசைன்) பணிக்கு இளங்கலை படிப்பில் பைன் ஆர்ட்ஸ், விசுவல் ஆர்ட்ஸ், டிசைன்/கமெர்ஷியல் ஆர்ட்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும் செக்ரட்டரியல் அசிஸ்டென்ட் பணிக்கு டிகிரி படிப்பை முடித்து கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருப்பதோடு ஆங்கிலம் அல்லது இந்தியில் நிமிடத்துக்கு 80 வார்த்தை தட்டச்சு செய்யும் ஸ்டேனோகிராபி திறன் மற்றும் நிமிடத்துக்கு 40 வார்த்தை தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

ஜூனியர் டெக்னீசியன் (வொர்க் ஷாப் - எலக்ட்ரிக்கல்) பிரிவில் ஐடியைில் எலக்ட்ரிக்கல் டிரேட் பிரிவில் சான்று பெற்றிருக்க வேண்டும். வொர்க் ஷாப் - மெஷினிஸ்ட் பணிக்கு மெஷினிஸ்ட் டிரேட், வொ்க் ஷாப் - பிட்டர் பணிக்கு பிட்டர், வொர்க் ஷாப் - எலக்ட்ரானிக்ஸ் பணிக்கு எலக்ட்ரானிக்ஸ், வொர்க் ஷாப் ஏர் கண்டிஷனிங் பணிக்கு ஏர் கண்டிஷனிங் டிரேட் படிப்புகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் டெக்னீசியன் (பிரிண்டிங்/கண்ட்ரோல்) பணிக்கு என்றால் ஐடிஐயியில் லித்தோ ஆஃப்செட் மெஷின் மைண்டர்/லெட்டர் பிரஸ் மெஷின் மைண்டர்/ஆஃப்செட் பிரிண்டிங்/ ப்ளேட் மேக்கிங்/ எலக்ட்ரோபிளேட்டிங்/ ப்ளேட் மேக்கர் கம் இம்போசிட்டரில் ஹேண்ட் கம்போஸிங் அல்லது டிப்ளமோ பிரிண்டிங் டெக்னாலஜியில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: சூப்பர்வைசர் பணிக்கு என்றால் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆர்டிஸ்ட் மற்றும் செக்ரட்டரியல் அசிஸ்டென்ட் பணி என்றால் 18 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். ஜூனியர் டெக்னீசியன் பணி என்றால் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது முதல் 15 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும் தளர்வு அளிக்கப்படும்.

மாத சம்பளம்: சூப்பர்வைசர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.27,,600 முதல் ரூ.95,910 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்டிஸ்ட், செக்ரட்டரியல் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ.23,910 முதல் ரூ.85,570, ஜூனியர் டெக்னீசியன் என்றால் ரூ.18,780 முதல் ரூ67,390 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://cnpnashik.currency Note Press.com/ எனும் இணையதளம் மூலம் 2023 நவம்பர் மாதம் 18 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு கட்டணமாக ரூ.200 உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+