சென்னையில் சூப்பர் வேலை.. EEE முடித்தோருக்கு ஜாக்பாட்.. Siemens வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு துறைகளில் சேவைகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Siemens சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

Siemens என்பது ஜெர்மனியை சேர்ந்த மல்டிநேஷனல் டெக்னாலஜி நிறுவனமாகும். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்டது இந்த நிறுவனம்.

it jobs job

தற்போது சீமென்ஸ் நிறுவனம் பல்வேறு துறைகளை மையப்படுத்தி செயல்பட்டு வருகிறது. உள்கட்டமைப்பு, ஹெல்த்கேர் உள்பட பல துறைகளுக்கு தேவையான இண்டஸ்ட்டீரியல் ஆட்டோமோஷன் மற்றும் சாப்ட்வேர்களை வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம் நம் நாட்டில் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னையிலும் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள சீமென்ஸ் நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

அதன்படி தற்போது சென்னை சீமென்ஸ் நிறுவனத்தில் கிராசூவேட் டிரெய்னி இன்ஜினியர் (Graduate Trainee Engineer) பிரிவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். டெக்னிக்கல் பிரிவில் திறமையாக இருக்க வேண்டும்.

அதேபோல் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சேல்ஸ் பிரிவு சார்ந்து பணியாற்ற வேண்டியிருக்கும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

அதேபோல் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+