கைநிறைய சம்பளம்! உதவி லோகோ பைலட் உள்பட தெற்கு ரயில்வேயில் குவிந்திருக்கும் வேலை! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: தெற்கு ரயில்வேயில் உதவி லோகோ பைலட் உள்பட மொத்தம் 4 பிரிவுகளில் மொத்தம் 790 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு தகுதிவாய்ந்தவர்களிடம் விண்ணப்பம் வரவேற்கப்பட உள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே உள்ளது. இந்நிலையில் தான் ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட வருகிறது.

அந்த வகையில் தற்போது தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தெற்கு ரயில்வேயில் மொத்தம் 4 பிரிவுகளில் மொத்தம் 790 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி உதவி லோகோ பைலட் பணிக்கு 234 பேர், டெக்னீசியன் III பிரிவில் 361 பணியிடங்கள், ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 168 பணியிடங்கள், ரயில் Guard/Train Manager பணிக்கு 27 பேர் என மொத்தம் 790 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பம் செய்வோர் பொதுப்பிரிவினராக இருந்தால் 18 வயது முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினராக இருந்தால் 18 வயது முதல் 45 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 18 வயது முதல் 47 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.01.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 10, 12, ஐடிஐயில் வெவ்வேறு படிப்புகள், டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர்கள், டிகிரி படித்தவர்கள் தெற்கு ரயில்வே, ஐசிஎப் Regular Employee விண்ணப்பம் செய்யலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 30ம் தேதிக்குள் www.rrcmas.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் Computer Based Test, Aptitude Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான கூடுதல் விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications